அமைச்சர் தொகுதியில் கள்ள ஓட்டு: தேர்தல் அதிகாரி ஆலோசனை

மூணாறு : இடுக்கி லோக்சபாவில் மின்துறை அமைச்சர் மணியின் சட்டசபை தொகுதியில் கள்ள ஓட்டுப்பதிவானதாக எழுந்த புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி தினேசன், ஓட்டு சாவடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கேரளாவில் ஏப். 23ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது கண்ணுார், கோழிக்கோடு ஆகிய தொகுதிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு இடதுசாரி, காங்., கூட்டணி புகார் அளித்தன.

இதனிடையே இடுக்கி லோக்சபாவில் மின்துறை அமைச்சர் மணியின் சட்டசபை தொகுதியான உடும்பன் சோலையில் கள்ள ஓட்டுகள் பதிவானதாக இடுக்கி மாவட்ட காங்., தலைவர் இப்ராஹிம்குட்டி கல்லார், மாவட்ட தேர்தல் அதிகாரி தினேசனிடம் புகார் அளித்தார். அதையடுத்து தினேசன் சம்பந்தப்பட்ட ஓட்டு சாவடிகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கள்ள ஓட்டளித்ததாக புகாருக்குள்ளான நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)