மோடி, உங்கள் நேரம் முடிந்து விட்டது : ராகுல் டுவீட்

புதுடில்லி : மோடி, உங்களின் நேரம் முடிந்து விட்டது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியை திருடன் என குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக பா.ஜ., சார்பில் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அனுப்பிய நோட்டீசிற்கு பலமுறை ஆஜராகி மன்னிப்பு கேட்டார் ராகுல். இந்நிலையில் கோர்ட் அறிவுறுத்தலின் பேரில், இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.


நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ராகுல் டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். அதில், நியாய்.,க்காக அதிக அளவிலான இளம் வாக்காளர்கள் மட்டுமல்ல நாடு முழுவதிலும் அனுபவம் வாய்ந்த முதியவர்களும் அந்த திட்டத்தின் ஆற்றலை புரிந்து கொண்டு ஓட்டளித்துள்ளனர். மோடி அவர்களே, உங்களின் நேரம் முடிந்து விட்டது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)