நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ராகுல்

புதுடில்லி : 'ரபேல்' போர் விமானம் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியதற்கு, இன்று, காங்., தலைவர் ராகுல், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்


ராகுல் சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டு 3 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


'ரபேல் போர் விமான ஒப்பந்தம், தொடர்பான வழக்கில், எந்த முறைகேடும் நடக்கவில்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகின்றது. இந்த வழக்கில், பத்திரிகைகளில் வெளியான, செய்திகளில் குறிப்பிட்டிருந்த சில ஆவணங்கள், ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன. 'ராணுவ அமைச்சகத்தில் இருந்து , திருட்டுத்தனமாக நகல் எடுக்கப்பட்டதால், அந்த ஆவணங்களின் அடிப்படையில், விசாரிக்கக் கூடாது' என, மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த, சுப்ரீம் கோர்ட் அந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக கூறியது.

அப்போது இது குறித்து, காங்., தலைவர், ராகுல் கருத்து தெரிவித்திருந்தார். 'தன்னை நாட்டின் காவல்காரனாக கூறிக் கொள்ளும், பிரதமர் நரேந்திர மோடி, ஒரு திருடன் என்பதை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது' என, அவர் கூறியிருந்தார். நீதிமன்றம் கூறாததை, திரித்துக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக, பா.ஜ., பெண்,எம்.பி., மீனாட்சி லேகி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


ஏப்.,30 அன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் பா.ஜ., வாதிட்டது. இதன்படி கோர்ட் அறிவுறுத்தியதன் பேரில் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக ராகுல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே 2 முறை சுப்ரீம் கோர்ட் அனுப்பிய நோட்டீசுக்கு ராகுல் மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்க மறுப்புஇதனிடையே, பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நற்சான்றிதழ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசின் சுஷ்மிதா தேவ் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது குறித்து தனியாக விசாரிக்கப்படும். முறையாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)