தேர்தல் ஆணையம் மீது வைகோ குற்றச்சாட்டு

அவனியாபுரம்:ம.தி.மு.க, பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் கூறியதாவது: லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்.



இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி அமித்ஷா, மோடிக்கு ஆதரவாகவும் நெறிமுறைகள் தவறியும் செயல்பட்டு வருகிறது.ராணுவத்தை மையப்படுத்தி ஓட்டு கேட்டிருக்க கூடாது என முன்னாள் தேர்தல் அதிகாரி குரேசி கூறியுள்ளார்.உத்தரபிரதேசத்தில் மாயாவதிக்கு 72 மணிநேரம் பிரசாரம் செய்ய தடை செய்தாற்போன்று மோடியையும் தடுத்திருக்க வேண்டும்.மத்தியில் அமைக்கப்படவுள்ள ஆட்சியில் மாநில கட்சிகளுக்கும் நிச்சயம் அதிகாரம் கிடைக்கும், என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)