ஆட்சியை கவிழ்க்க சதி ஸ்டாலின் மீது புகார்

மதுரை:''அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பல கட்சிகளுடன் இணைந்து முயற்சி செய்தார்'' என அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டினார்.



'மே 23 க்கு பின் தி.மு.க.,வுடன் இணைந்து அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்போம்' என அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்கதமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்து மதுரையில் முனுசாமி கூறியதாவது:



ஸ்டாலின் ஏற்கனவே பல்வேறு கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை செய்து அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார். அதன்படி அந்த நபருடன் (தங்கதமிழ்ச்செல்வன்) ரகசிய பேச்சு நடத்தியது அம்பலம் ஆகியிருக்கிறது, என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)