பிரதமரை கொல்ல ரூ.50 கோடி பேரம்? 'மாஜி' வீரர் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

புதுடில்லி: எல்லை பாதுகாப்பு படையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தேஜ் பகதுார் பிரதமர் மோடியை கொலை செய்வதற்காக 50 கோடி ரூபாய் பேரம் பேசுவது போன்ற 'வீடியோ' வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தேஜ் பகதுார் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் தேஜ் பகதுார். கடந்த 2017ல் துணை ராணுவப் படையினர் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக இவர் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

பணி நீக்கம்:இதையடுத்து ராணுவ நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதற்காக தேஜ் பகதுார் சமாஜ்வாதி கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த வேட்பு மனுவில் போதிய தகவல் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக ஒரு அதிர்ச்சியான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிரதமர் மோடியை கொலை செய்ய தேஜ் பகதுார் மற்றொரு நபரிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசுவது போன்ற காட்சி உள்ளது.

அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ குறித்து தேஜ் பகதுார் கூறியதாவது: அந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் இருப்பது நான் தான். இது 2017ல் என்னை பணி நீக்கம் செய்தபின் டில்லியில் போராட்டம் நடத்தியபோது எடுக்கப்பட்டது. டில்லி போலீசில் பணியாற்றும் ஒரு போலீஸ்காரர் இந்த வீடியோவை எடுத்தார்.

ஆனால் பிரதமரை கொல்ல சதி செய்ததாக அந்த வீடியோவில் இருக்கும் காட்சிகளும் வசனங்களும் பொய்; அது செயற்கையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையான வீடியோவில் சில மாற்றங்களை செய்துள்ளனர். பிரதமருக்கு எதிராக எந்த சதியிலும் நான் ஈடுபடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அம்பலம்:இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறியதாவது: பிரதமரை கொல்ல நக்சலைட்கள் சதி செய்துள்ளது மஹாராஷ்டிரா போலீசார் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு அம்பலமானது. இப்போது சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமரை கொல்ல பேரம் பேசியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து அரசியல் கட்சியினரும் இந்த செயலை கடுமையாக கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)