பிரதமர் மீது நடவடிக்கை: காங்., வலியுறுத்தல்

புதுடில்லி : தேர்தல் விதிகளை மீறி முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து பேசிய கருத்திற்காக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனை காங்., மீண்டும் வலியுறுத்தி உள்ளது. உ.பி., காங்., சார்பில் தேர்தல் கமிஷனுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், பிரதமர் மோடியின் கருத்து தேர்தல் விதிகளை மீறியது மட்டுமல்ல பாரத ரத்னா விருது பெற்ற தியாகி ஒருவரை அவமதித்துள்ளார். இதனால் பொதுக்கூட்டங்களில் பேச பிரதமர் மோடிக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் மோடி மீது அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக, பிரதமர் விதிகள் எதையும் மீறவில்லை என 6 முறை தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,
பிரதமர் மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட பெரும்பாலான புகார் மனுக்களை தேர்தல் கமிஷனர்கள் 3 பேர் தள்ளுபடி செய்துள்ளனர். இருப்பினும் காங்., சார்பில் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

கமிஷன் மீது முறையீடு



:இந்த நிலையில், மோடி மற்றும் அமித்ஷா மீதான புகார்கள் மீது தேர்தல் கமிஷன் முறையான நடவடிக்கை இல்லை என்று கூறி இன்று (மே.6) சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் கட்சி முறையிட்டுள்ளது. முன்னதாக, மோடி மற்றும் அமித்ஷா தேர்தல் விதிகளை மீறவில்லை என்று தேர்தல் கமிஷன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)