யெச்சூரி மீது வழக்கு

ஹரித்வார் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி பேட்டி ஒன்றில், இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் முழுமுழுக்க வன்முறைகள் மற்றும் சண்டைகள் நிறைந்தது. பல மன்னர்களும் போர்களில் சண்டையிட்டுள்ளனர். அப்படி இருக்கையில் இந்துக்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என எப்படி பிரக்யா சிங் எப்படி சொல்கிறார் என பேசி இருந்தார். இந்துக்களின் புனித நூல்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக யெச்சூரி மீது பாபா ராம்தேவ், ஹரித்வார் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் யெச்சூரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)