ரூ. 20 ஆயிரம் பணம்: பா.ஜ.மீது பிரியங்கா புகார்

அமேதி: அமேதி தொகுதியில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் லஞ்சமாக பா.ஜ. வழங்கி வருகிறது என பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார். லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலம் அமேதி தொகுதியில் காங். தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்த காங்.பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியது, அமேதி தொகுதிகுட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் காங். தேர்தல் வாக்குறுதிகளை நோட்டீசாக கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறோம்.
ஆனால் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பா.ஜ. லஞ்சமாக கொடுத்து வருகிறது.ராகுலை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.வின் ஸ்மிருதி இராணி தேர்தலுக்காகத்தான் இத்தொகுதிக்கு பல முறை வந்து போகிறார். அவர் நாடகமாடுகிறார் அதை கிராமவாசிகள் நம்பி ஏமாறவேண்டாம். ஆனால் ராகுல் அப்படியல்ல இங்குள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)