ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., காங்.,குக்கு தாவல்

சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில், மேலும் ஒரு ஆம் ஆத்மி, எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆம்ஆத்மி கட்சிக்கு, 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

இங்குள்ள, ரூப்நாகர் தொகுதி ஆம் ஆத்மி, எம்.எல்.ஏ., அமர்ஜித்சிங் சந்தா. இவர், முதல்வர் அமரீந்தர் சிங் முன்னிலையில், காங்., கட்சியில் நேற்று சேர்ந்தார். கடந்த மாதம், 29ல், மான்ஸா தொகுதி ஆம்ஆத்மி, எம்.எல்.ஏ., நஸார்சிங் மன்ஸாகியா, காங்கிரசில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பஞ்சாப் சட்டசபையில், காங்., 78 எம்.எல்.ஏ.,க்களுடன்,முழுபலத்துடன் ஆட்சி நடத்துகிறது.


எதிர்க்கட்சி வரிசையில், 18 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட பெரிய கட்சியாக ஆம் ஆத்மி விளங்கியது. ஆனால், தற்போது, இரண்டு பேர் விலகியுள்ளனர்.சிரோன்மணி அகாலி தளம் - இரண்டு; பா.ஜ., - மூன்று; லோக் இன்ஷாப் கட்சி - இரண்டு, ஆகியவை, எதிர்க்கட்சி வரிசையில் உள்ளன. இரண்டு இடங்கள், காலியாக இருக்கின்றன.டில்லியில், ஆம்ஆத்மி, எம்.எல்.ஏ., அனில் பாஜ்பாய், நேற்று முன்தினம், பா.ஜ.,வில் சேர்ந்தது குறிப்பிடத் தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)