டில்லி பேரணியில் கெஜ்ரிவாலுக்கு அடி

புதுடில்லி: டில்லியில் நடந்த பேரணியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கெஜ்ரிவாலை மர்ம நபர் ஒருவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


டில்லியின் வடக்கு தொகுதியில், முதல்வர் கெஜ்ரிவால், இன்று(மே 4)திறந்த ஜீப்பில் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். மோட்டி நகர் பகுதியில் அவர் , அங்கிருந்தவர்களிடம் கைகுலுக்கியும், பேசி கொண்டு வந்தார். அப்போது சிவப்பு சட்டை அணிந்த ஒருவர் திடீரென ஜீப் மீது ஏறி கெஜ்ரிவால் கன்னத்தில் அறைந்தார்.

உடனடியாக மர்ம நபரை பிடித்த முதல்வரின் ஆதரவாளர்கள், அவரை தாக்கினர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மர்மநபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தாக்கிய நபர் பெயர் சுரேஷ் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை அல்ல . கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டில்லியில், கெஜ்ரிவால் மீது அனில் குமார் சர்மா என்ற நபர் மிளகாய் பொடியை வீசி தாக்கினார்.

கடந்த பிப்., மாதம் கெஜ்ரிவால் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)