முப்படை மோடியின் சொத்து அல்ல: ராகுல்

புதுடில்லி : முப்படைகள் பிரதமர் மோடியின் தனிப்பட்ட சொத்து அல்ல என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறுகையில், தற்போது மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது வேலையின்மை. நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்ததே இதற்கு காரணம். 2 கோடி வேலைவாய்ப்புக்கள் தருகிறேன் என்றீர்களே என்ன ஆயிற்று என நாட்டு மக்கள் மோடியிடம் கேட்கிறார்கள். வேலைகள் பற்றியோ விவசாயிகள் பற்றியோ ஒரு வார்த்தை கூட அவர் பேசுவதில்லை. அது பற்றி ஏதும் சொல்வதும் இல்லை.ராணுவம், விமானப்படை அல்லது கடற்படை ஆகியன மோடி நினைப்பது போல் அவரின் தனிப்பட்ட சொத்து அல்ல. காங்., ஆட்சியின் போது நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அவர் வீடியோ கேம் என கூறியது காங்.,க்கு அவமரியாதை அல்ல. ராணுவத்தை தான் அவர் அவமதித்துள்ளார்.
எனது பேச்சு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. என் கருத்தில் ஏதோ தவறு இருப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியதாலேயே மன்னிப்பு கேட்டேன். பா.ஜ.,விடமோ அல்லது மோடியிடமோ நான் மன்னிப்பு கேட்கவில்லை. சவ்கிதார் சோர் ஹெய் தொடர்ந்து எங்களின் ஸ்லோகமாக இருக்கும் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)