பயங்கரவாதிகளுக்கு பயந்த காங்.,: மோடி

கரவுலி: காங்., ஆட்சியில் நாட்டில் தினமும் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றதாகவும், தற்போது பயங்கரவாதிகள் பயந்து ஓடுகிறார்கள் என்றும் பிரதமர் மோடி பேசி உள்ளார். ராஜஸ்தானின் கரவுலி பகுதியில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், நாம் இன்று இங்கு கூடி இருக்கும் அதே சமயம் கிழக்கு கடற்கரை பகுதியில் வாழும் மக்களும், தென்னிந்தியாவில் வாழும் மக்களும் அதிதீவிர புயலை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்து வருகிறது. நேற்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகாரிகளிடம் அங்குள்ள நிலை குறித்து கேட்டறிந்து வருகிறேன். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு நேற்றே ரூ.1000 கோடிக்கும் அதிகமான நிலை முன்பணமாக அளிக்கப்பட்டு விட்டது.
தேசிய பேரிடம் மீட்பு படையினர், இந்திய கடலோர காவல்படை, ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியன மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுடன் நாடும், மத்திய அரசும் துணை நிற்கும் என்பதை உறுதி அளிக்கிறேன். 2 நாட்களுக்கு முன் இந்தியாவின் பெரிய எதிரியான பயங்கரவாத தலைவன் மசூத் அசார், சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்த பயங்கரவாத தலைவன் பாகி.,ல் இருந்து கொண்டு இந்தியாவிற்கு அடுத்தடுத்து வலிகளை கொடுத்துக் கொண்டு இருந்தான்.

ராஜஸ்தானின் பல்வேறு துணிச்சலான தாய்மார்கள் தங்களின் மகன்களை இது போன்ற பயங்கரவாத தாக்குதல்களில் இழந்து தவித்தார்கள். தற்போது இந்த பயங்கரவாதி பாக்.,ல் சொகுசு வாழ்க்கை வாழ்வதில் சிக்கல் உண்டாக்கப்பட்டுள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக், விமானப்படை தாக்குதல் மற்றும் மிகப் பெரிய சர்வதேச தாக்குதலை பாக், பயங்கரவாதிகள், பயங்கரவாத தலைவர்களுக்கு கொடுத்துள்ளோம்.
மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது தினமும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் ஆட்சியில் எந்த நகரமும் பாதுகாப்பாக இல்லை. 2008 ல் பயங்கரவாதிகள் மும்பையில் எப்படி தாக்குதல் நடத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 2008 ஜனவரியில் உ.பி.,யில் சிஆர்பிஎப் முகாம் மீது தாக்குதல். மே மாதத்தில் ஜெய்ப்பூரில் தாக்குதல். ஜூலையில் பெங்களூரு தொடர் வெடிகுண்டு தாக்குதல். அடுத்த நாள் ஆமதாபாத்தில் குண்டுவெடிப்பு. செப்டம்பரில் டில்லியில் 2 பயங்கரவாத தாக்குதல்கள். அக்டோபரில் கவுகாத்தி, அகர்தலா, இம்பாலில் தொடர் குண்டுவெடிப்பு.
இளைஞர்கள் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் பயங்கரவாதிகளுக்கு பயந்து 2009 மற்றும் 2014 ல் இந்தியாவில் அப்போட்டிகளை நடத்தாமல் தென்னாப்பிரிக்காவில் நடத்தினர். அப்போதைய அரசுக்கு துணிச்சல் இல்லை. 2009, 2014 ல் அவர்கள் என்ன கூறினார்கள், தேர்தல் நேரம் என்பதால் போலீசார் பிசியாக உள்ளதாகவும், கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்றனர்.
இப்போதும் தேர்தல், நவராத்திரி, ராமநவமி, அனுமன் ஜெயந்தி எல்லாம் நடக்கிறது. ரம்ஜானும் வரப் போகிறது. ஆனாலும் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது. அவர்கள் பயந்து ஓடும் அரசை நடத்தினர். பா.ஜ ஆட்சியில் அவர்கள் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர் என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)