ஷீலா தீட்ஷித் - அரவிந்த் கெஜ்ரிவால் யார் சிறந்த முதல்வர்?

டில்லிக்கு, பிற மாநிலங்களைப் போன்ற சமமான அந்தஸ்து வேண்டும் என, ஆம் ஆத்மி, லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்கிறது. அதற்காக, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசை கடுமையாக சாடுகிறது. அந்த அந்தஸ்து கிடைக்காததால் தான், டில்லியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என, கெஜ்ரிவால் முழங்குகிறார்.

இதை கேட்கும் காங்கிரசார், 'இதெல்லாம் சும்மா... டில்லியில், காங்கிரஸ் முதல்வராக, ஷீலா தீட்ஷித் இருந்த போதும், மாநில அந்தஸ்து இல்லை தான். அப்போதெல்லாம் வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லையா... இவர் சும்மா, போக்கு காட்டுகிறார்' என்கின்றனர்.இதையே, டில்லி மக்களும் பேசுகின்றனர். ஷீலா முதல்வராக இருந்த காலத்திலும், அதன் பின், துணை நிலை கவர்னர் ஆட்சியின் கீழும், ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டனவே... அதுபோல, கெஜ்ரிவால் அரசால் ஏன் செய்ய முடியவில்லை... என, சிந்திக்கின்றனர்.- கே.எஸ்.நாராயணன் -நமது சிறப்பு நிருபர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)