மோடி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு

புதுடில்லி: பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் மீதான புகாரில் வரும் மே.6 ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை எனவே தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என காங்., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கெடு விதிப்பு



இதன் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் ; மோடி மீதான புகார் தொடர்பாக வரும் மே.6ம் தேதிக்குள் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஏற்கனவே மோடி மீதான இரண்டு புகார்களில் தேர்தல் கமிஷன், நற்சான்று வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)