தோற்பதற்காகவே போட்டியிடும் காங்: ஸ்மிருதி

அமேதி : தோற்பதற்காகவே காங்., கட்சி உ.பி.,யில் போட்டியிடுவதாக மத்திய அமைச்சரும், அமேதி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், உ.பி.,யில் தோற்பதற்காகவே காங்., போட்டியிடுகிறது. எனது வெற்றி உறுதியாக உள்ளது. இது அமேதி மக்களின் வெற்றி. நான் சாதாரண கட்சி தொண்டர். பிரதமர் மோடியின் தலைமையிலான அரசில் பணியாற்றி வருகிறேன். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளை தொடர்ந்து காங்., தலைவரும் மக்களின் ஆதரவு இல்லாமல் ஓட போகிறார்.முதல் முறையாக கட்சி தொண்டர்கள் அரசியல் கடந்து நல்ல தலைமை அமைய வேண்டும் என்பதற்காக ஓட்டு கேட்டு வருகிறார்கள். இது பா.ஜ.,வுக்கும், காங்.,க்கும் இடையேயான போட்டி இல்லை. இது மக்களுக்கும், அவ்வப்போது மாயமாகி போகும் எம்.பி., ஒருவருக்கும் இடையேயான நேர்மையான போட்டி. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பக்கமே வராதவர், பிரசாரத்திற்காக மட்டுமே வருகிறார். அவர் பார்லி.,யிலும் அமேதி குறித்து பேசுவது இல்லை என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)