எம்எல்ஏ.,க்களை பேரம் பேசும் பா.ஜ, : கெஜ்ரி குற்றச்சாட்டு

புதுடில்லி : ஆம்ஆத்மி எம்எல்ஏ.,க்களை விலை பேச பா.ஜ., முயற்சி செய்து வருவதாக டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். பிரசாரத்திற்கு இடையே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கெஜ்ரிவால் கூறுகையில், கடந்த 3 நாட்களாக எங்கள் கட்சியின் 7 எம்எல்ஏ.,க்களை பா.ஜ., தங்களை தொடர்பு கொண்டதாக கூறினார்கள். ரூ.10 கோடி தருவதாக அவர்களை விலை பேசி உள்ளது பா.ஜ., அவர்கள் எங்கள் எம்எல்ஏ.,க்களை மனம்மாற்ற நினைக்கிறார்கள்.
இது பிரதமர் மோடிக்கு ஏற்றதல்ல. மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்கி, மம்தா ஆட்சியை கவிழ்க்க உள்ளதாக நேற்று முன்தினம் கூறினார் என்றார்.மேலும், நாங்கள் மக்களுக்கான வசதிகளை செய்து தருவதற்கு கூடுதல் பலம் வேண்டும் என கூறி ஓட்டுக் கேட்கிறோம். ஆனால் மோடி அவர் பெயரை கூறி ஓட்டுக் கேட்கிறார். டில்லியில் 7 இடங்களிலும் ஆம்ஆத்மி வெற்றி பெற்றால், எங்கள் கட்சியின் பலம் கூடும். டில்லியில் இன்னும் பல வளர்ச்சி பணிகளை செய்வோம். மத்தியில் இருக்கும் பா.ஜ., அரசு எப்போது எங்கள் வழியில் இடையூறாக உள்ளது என்றார்.ஏப்.,29 அன்று மேற்குவங்கத்தின் சேராம்புர் பகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, மே 23 தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எங்கும் தாமரை மலரும். மம்தாவின் எம்எல்ஏ.,க்கள் அவரை விட்டு போய் விடுவார்கள். மம்தா கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏ.,க்கள் இப்போதும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)