மோடி கூட்டத்தில் நிதிஷ் மவுனம் :சமூக வலைதளங்களில் விமர்சனம்

பாட்னா: பீஹாரில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 'வந்தே மாதரம்' என ஆவேசமாக குரல் எழுப்பிய போது, அருகில் இருந்த பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், அமைதியாக இருந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், ஏப்., 11ல் துவங்கி மே 19 வரை, ஏழு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடக்கிறது.

ஓட்டுப்பதிவுநான்கு கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்னும் மூன்று கட்ட ஓட்டுப்பதிவுமீதமுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில், தே.ஜ., கூட்டணி கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.சமீபத்தில், பீஹாரின் தர்பங்கா மாவட்டத்தில், பிரதமர் மோடி, தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். அதில், தே.ஜ., கூட்டணி கட்சியினர், பிரதமருடன் கலந்து கொண்டனர்.பேச்சின் இறுதியில், பிரதமர் நரேந்திர மோடி, 'பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம்' என, ஆவேசமாக குரல் எழுப்பினார்.
கூட்டணி கட்சியினரும், தொண்டர்களும் அதை ஆவேசமாக திரும்ப கூறினர்.தே.ஜ., கூட்டணியை சேர்ந்த மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானும், 'வந்தே மாதரம்' என குரல் எழுப்பினார்

தர்மசங்கடம்ஆனால், அருகில் இருந்த பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், அமைதியாக அமர்ந்திருந்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில், வேகமாகபரவி வருகிறது.பல்வேறு கட்சியினரும், நிதிஷ் குமாரின் மவுனம் குறித்து விமர்சித்து வருகின்றனர். இது, ஐக்கிய ஜனதா தள தொண்டர்களை, தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)