அ.தி.மு.க., வேட்பாளர் தகுதி நீக்கம் கோரி மனு

சென்னை:'திருப்பரங்குன்றம், அ.தி.மு.க., வேட்பாளரின் பெயர், வாக்காளர் பட்டியலில், இரண்டு இடங்களில் உள்ளதால், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர், முஸ்தபா, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு கொடுத்துள்ளார்.


மனுவில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், சூலுார், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 19ம் தேதி, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்தொகுதிகளில், வேட்பு மனு தாக்கல் முடிந்து, நேற்று முன்தினம், மனுக்கள் பரிசீலனை நடந்தது.நான்கு தொகுதிகளிலும், ஆளும் கட்சி வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.



வேட்பாளர்கள் அனைவரும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வேட்பாளர்கள் மனு தாக்கலின்போது, தம் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும்.திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர், முனியாண்டியின் பெயர், இரண்டு இடங்களில், வாக்காளர் பட்டியலில் உள்ளது. இரண்டு இடங்களிலும், வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார்.


அதை மறைத்து, ஒரு இடத்தில் மட்டும், பெயர் உள்ளதாக குறிப்பிட்டு, அதற்குரிய வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து, மனு தாக்கல் செய்துள்ளார். இது, தேர்தல் விதி மீறல். எனவே, அவரது வேட்பு மனுவை நிராகரித்து, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)