பிரதமர் அலுவலகம் மீது ஆணையத்திடம் காங்., புகார்

புதுடில்லி: 'பிரதமர் அலுவலகத்தை, மோடி தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையத்திடம், காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. அத்துடன், மத்திய பிரதேசத்தில், மோடி பங்கேற்கும் பேரணிக்கு தடை விதிக்கவும் அது கோரியுள்ளது.

அறிவுறுத்தல்:



டில்லியில், தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த பின், காங்கிரஸ் மூத்த தலைவர், அபிஷேக் சிங்வி, செய்தியாளர்களிடம் பேசியதாவது: பிரதமர் அலுவலகம், 'நிடி ஆயோக்' அமைப்பை தவறாக பயன்படுத்தி, மோடி பிரசாரம் செய்யவிருக்கும் பகுதிகளின், கலாசார முக்கியத்துவங்களை, முன்கூட்டியே அறிந்து கொள்கிறது. இந்த பகுதிகளின் சிறப்புகளை சேகரித்து அனுப்ப, மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதுமாறு, நிடி ஆயோக் அமைப்பை, பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

மோடி, இதர வேட்பாளர்களை போலத்தான் பிரசாரம் செய்ய வேண்டும். அவர், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய பிரதமர் இந்திரா, இதேமுறையை பின்பற்றியபோது, தடை விதிக்கப்பட்டது. எனவே, பிரதமர் அலுவலகம் தவறாக பயன்படுத்தப்படுவதை, உடனடியாக தடுக்க வேண்டும். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்.

பிரசார பேரணி:



அடுத்து, மத்திய பிரதேசத்தின், டாமோ லோக்சபா தொகுதிக்கு, 6ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதியை ஒட்டி உள்ள, சாகர் மாவட்டத்தில், மோடியின் தேர்தல் பிரசார பேரணி நடைபெற உள்ளது. அவரின் பிரசாரம், டாமோ தொகுதி ஓட்டுப் பதிவில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே, மோடியின் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)