சின்ஹா தம்பதி சொத்து மதிப்பு ரூ.305 கோடி!

பாட்னா:நடிகரும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான சத்ருகன் சின்ஹா, தனக்கு, 112 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும், சத்ருகன் மனைவி, பூனம் சின்ஹாவுக்கு, 193 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பிரபல ஹிந்தி நடிகர்சத்ருகன் சின்ஹா. சமீபத்தில், பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்த அவர், தற்போது, பாட்னா சாகிப் தொகுதியில் நடக்கும், லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.


இந்த தொகுதியில் வரும் 19ல், தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல், கடந்த திங்களன்று நிறைவடைந்தது.இந்நிலையில், சத்ருகன் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு, 112 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் ஏழுகார்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், வங்கியில் கடன் எதுவும் வாங்கவில்லை; ஆனால், தன் மகளும், நடிகையுமான சோனாக் ஷி சின்ஹாவுக்கு, 10.59 கோடி ரூபாய், தான் தர வேண்டியுள்ளது என்றும், மகளிடம் இருந்து, தன் மனைவி பூனம் சின்ஹா, 16.18 கோடி ரூபாய் வாங்கியுள்ளார் என்றும், சத்ருன் சின்ஹா, தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


பணக்கார வேட்பாளர்சத்ருகன் சின்ஹா மனைவி, பூனம் சின்ஹா, சமாஜ்வாதி கட்சி சார்பில், உ.பி., மாநிலம், லக்னோ தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.லோக்சபாவுக்கான, ஐந்தாம் கட்ட தேர்தல் வரும், 6ம் தேதி, 51 தொகுதிகளில் நடக்கிறது.இதில், 674 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பை, 'நேஷனல் எலக் ஷன் வாட்ச்' மற்றும் 'அசோசியேஷன் பார் டெமாக்ரட்டிக் ரிபார்ம்ஸ்' ஆகிய அமைப்புகள் ஆய்வுசெய்தன.


ஆய்வுக்குப் பின், இந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆறு வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் கிடைக்கவில்லை. 668 பேருடைய விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், சமாஜ்வாதி கட்சியின், லக்னோ வேட்பாளர் பூனம் சின்ஹா, 193 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடம் வகிக்கிறார்.


அதே கட்சியின் சார்பில், உ.பி.,யின் சித்தாபூர் தொகுதியில் களம் இறங்கியுள்ள, விஜயகுமார் மிஸ்ராவுக்கு, 177 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் ஜெயந்த் சின்ஹா, 77 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)