டில்லியில் மேயர் ஆனார் டீக்கடைக்காரர்

புதுடில்லி : டில்லியில் டீக்கடை நடத்தி வந்த அவதார் சிங் என்ற பா.ஜ. தொண்டர் வடக்கு டில்லியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வடக்கு டில்லி பகுதியை சேர்ந்தவர் அவதார் சிங். பா.ஜ. தொண்டரான இவர் பல ஆண்டுகளுக்கு முன் ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தார். பின்னர் சொந்தமாக டீக்கடை துவங்கினார். வடக்கு டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வானார்.

இந்நிலையில் வடக்கு டில்லி மாநகராட்சியின் மேயராக அவதார் சிங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடி தனது 'டுவிட்டர்' சமூகவலை தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டில்லியில் மேயர் பதவி வகிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முதல் சீக்கியர் அவதார் சிங் என அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)