பா.ஜ., - காங்., நேரடியாக மோதும் தொகுதிகள்

புதுடில்லி: இதுவரை 4 கட்ட தேர்தல்களில் 374 லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்திருக்கிறது. மீதி உள்ள 169 தொகுதிகள், பா.ஜ.,வுக்கு முக்கியமானவை. இவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரசை பா.ஜ., நேரடியாக எதிர்கொள்கிறது.

நான்கு கட்ட தேர்தல் நடந்த 31 நாட்களில் பிரதமர் மோடி இதுவரை 87 கூட்டங்களில் பேசிவிட்டார். மிகவும் தன்மையாகவும் விளக்கமாகவும் அவர் பேசுவதால், மோடி கூட்டங்களுக்கு அதிக மக்கள் திரள்கின்றனர். இதுவரை நடந்த கணிப்புகளின் படி, காங்.,யை விட பா.ஜ.,வுக்கு சாதகமாக தகவல்கள் வருகின்றன.

7 கட்டத்தால் பயனுண்டாஉ.பி., மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனால் நிறைய பொதுக்கூட்டங்களில் மோடி கலந்துகொள்ள வசதியாக போய்விட்டது. இந்த மாநிலங்கள் தவிர மகாராஷ்டிரா, ஒடினுா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் 50 சதவீத பொதுக்கூட்டங்களில் மோடி பேசி உள்ளார்.

நான்காவது கட்டத்தில் தேர்தல் நடந்த ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களிலும் கணிசமான கூட்டங்களில் மோடி பேசி விட்டார்.
ஆனாலும் மோடி அதிக கவனம் செலுத்துவது உ.பி., மேற்கு வங்கத்தின் மீது தான். 90 பொதுக்கூட்டங்களில் இம்மாநிலங்களில் மட்டும் 20 கூட்டங்களில் அவர் பேசி உள்ளார். இம்மாநிலங்களில் பாதிக்கு மேல் இன்னமும் தேர்தல் நடக்கவில்லை.
இந்த இரு மாநிலங்களிலும் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்று மோடி விரும்புகிறார். 2014 தேர்தலில் உ.பி.,யில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் 73ல் பா.ஜ., கூட்டணி வென்றது. ஆனால் மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்றது.
இந்த வாரம் கிழக்கு உ.பி.,யில் 6 பொதுக்கூட்டங்களில் மோடி பேச உள்ளார். உ.பி.,யில் மட்டும் 30 பொதுக்கூட்டங்களில் அவர் பேசுகிறார்.மேற்கு வங்கத்தில் இதுவரை 7 பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டார்.

மோடிக்கு நம்பிக்கைமீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்துவிடும் என்று மோடி நம்புகிறார். தேசியவாதம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற விஷயங்கள் தான் அவரது பேச்சில் அதிகம் இடம் பிடிக்கின்றன. இப்போது இலங்கை குண்டுவெடிப்புகளையும் சேர்த்துக்கொண்டார். ‛‛தன்னைப் போன்ற வலுவான தலைவர் தான் இதுபோன்ற ஆபத்தான நேரங்களில் நாட்டை வழி நடத்த முடியும்''என்று பேசுகிறார் மோடி.
இது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் எடுபடும் என்பது இனிமேல் தான் தெரியும்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)