தேர்தல் ஆணையம் மேனகாவுக்கு எச்சரிக்கை

புதுடில்லி : உத்தர பிரதேசத்தில் நடந்த பிரசாரத்தின்போது, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா, 'ஏ, பி, சி, டி' என, குறிப்பிட்டு பேசியதற்கு, தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துஉள்ளது. பிரசாரம்'இது தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளது.தேர்தல் பிரசாரத்தில், மத ரீதியில் பேசியதாக, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகாவுக்கு, 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.
இந்நிலையில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில், மேனகா சமீபத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் பேசியதாவது:பிலிபிட் தொகுதி யில், ஒவ்வொரு முறையும் நாம் வெற்றி பெறுகிறோம். அதனால், ஒவ்வொரு கிராமத்திலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, சில காரணிகளை வைத்துள்ளோம்.வளர்ச்சிப் பணிஇந்தத் தொகுதியில் உள்ள, கிராமங்களை, ஏ, பி, சி, டி என தரம் பிரிக்கிறோம்.
எந்த கிராமத்தில், 80 சதவீத ஓட்டு கிடைக்கிறதோ, அந்த கிராமம், ஏ என குறிப்பிடப்படும். இவ்வாறு ஒவ்வொரு கிராமமும் தரம் பிரிக்கப்பட்டு, எங்கு, அதிக ஓட்டு கிடைக்கிறதோ, அதற்கேற்றாற்போல், அங்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதனால், அதிக ஓட்டு அளித்தால், அதிக வளர்ச்சி கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.அவருடைய இந்த பேச்சுக்கு, தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:உங்களுடைய இந்தப் பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளை மட்டும் மீறவில்லை; மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளையும் மீறப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சு, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் முயற்சியாக அமைந்துள்ளது. பிரசாரத்தின்போது, கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும். இனி, இது தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.மோடி மீது புகார்: அறிக்கை தாக்கல்சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, 'எங்களிடம் அணு ஆயுதம் உள்ளது என்று அண்டை நாடான பாகிஸ்தான் மிரட்டி வருகிறது.

இந்த மிரட்டலுக்கு நாங்கள் பயப்படப் போவதில்லை. ஏன் நம்மிடமும் அணு ஆயுதம் உள்ளது. அது என்ன, தீபாவளி பண்டிகைக்காகவா வைத்திருக்கிறோம்' என, மோடி பேசினார்.தேர்தல் ஆணைய உத்தரவை மீறி, ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக, காங்., புகார் கூறியிருந்தது. இது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. அதன்படி, மோடியின் பேச்சு அடங்கிய, ஆடியோ மற்றும் அறிக்கையை, பார்மர் மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பி வைத்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)