அ.தி.மு.க.,வுக்கு விஜயகாந்த் ஆதரவு

சென்னை : 'நான்கு சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றிக்கு, தே.மு.தி.க., தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்' என, அக்கட்சியின் தலைவர், விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: நான்கு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, தே.மு.தி.க., முழு ஆதரவு அளிக்கிறது.சூலுார், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் உள்ள, தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முழு ஆதரவு தந்து, தேர்தல் பணியாற்ற வேண்டும்.கூட்டணி தர்மத்தின்படி, அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றிக்கு, அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு, விஜயகாந்த் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)