மீண்டும் நவீன் பட்நாயக்?

பிஜு ஜனதாதளம் கட்சியை சேர்ந்த, முதல்வர், நவீன் பட்நாயக் தலைமையிலான, ஒடிசா மாநிலத்தில், ஏற்கனவே, மூன்று கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நான்காவது கட்டம், இன்று நடக்கிறது. அத்துடன், அந்த மாநிலத்தில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் முடிவடைகிறது. அந்த மாநிலத்தின் முதல்வர் பதவியில், 19 ஆண்டுகளாக, அசைக்க முடியாமல் இருக்கும் நவீனுக்கு எதிராக, பா.ஜ., - காங்., போன்ற கட்சிகள் ஏதேதோ செய்தும், ஒன்றும் ஆகப் போவதில்லை என, இப்போதைய நிலைமை கூறுகிறது.

சட்டசபை தேர்தலில், அவர் கட்சி தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என, இங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், லோக்சபா தேர்தலில், இங்குள்ள 21 தொகுதிகள் யாருக்கு கிடைக்கும் என்பதிலும், நவீன் பக்கமே அதிக ஆதரவு உள்ளது. ஏற்கனவே, 15 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள, ஆறு தொகுதிகளுக்கு, 29ல் தேர்தல் நடக்க உள்ளது.

மயுர்பாஞ்ச், பாலாசோர், பாத்ராக், ஜஜ்புர், கேந்திரபாரா, ஜெகத்சிங்பூர் ஆகிய ஆறு தொகுதி களில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. எனினும், முதல்வர் நவீன் தவிர்த்து, பிற அறிமுகமான முகங்களை காணவில்லை. பிரதமர் மோடியும், ராகுலும் வந்து பிரசாரம் செய்துள்ளனர். ராகுலை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், உ.பி., மற்றும் கேரளாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்; பிரபலங்கள் ஒருவர் கூட, ஒடிசா வந்து பிரசாரம் செய்யவில்லை.

ஆனால், பா.ஜ.,வில் அப்படியில்லை. நவீன் கட்சியிலிருந்து, பா.ஜ.,வுக்கு தாவிய, பாய்ஜயந்த் பாண்டா, தொண்டர்களுடன் இறங்கி, கீழ் மட்டத்தில் வேலை செய்கிறார். இதனால், பிஜு ஜனதாதளம் மற்றும் பா.ஜ., இடையே தான் போட்டி இருப்பதாக தெரிகிறது; பிற கட்சி களை காணோம்!

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)