மோடி பேட்டி: அதிர்ச்சியில் திரிணமுல் காங்கிரஸ்

புதுடில்லி: 'டிவி' சேனல்கள், நாளிதழ்கள் என, அனைத்து மீடியாக்களுக்கும், பேட்டி கொடுத்து வருகிறார், பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில், பா.ஜ.,விற்கு கை கொடுக்கும் என்பதால், இப்படி செய்கிறார். இந்த வரிசையில், இந்தி நடிகர், அக்ஷய் குமாருக்கும், ஒரு பேட்டி கொடுத்தார் மோடி. அதில், அரசியல் பேசாமல், தன் வாழ்க்கையைப் பற்றி, ஜாலியாக பேசினார்.


அந்த பேட்டியில், 'என்னை, அரசியல் எதிரியாக நினைப்பவர்களும், என்னோடு பாசமாகவே உள்ளனர்; திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, ஒவ்வொரு வருடமும், எனக்கு ஸ்வீட் டப்பாவும், குர்தாவும் அனுப்பி வருகிறார்' என, சொன்னார்.இந்த பேட்டி, மம்தாவை, பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம். அவர், ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும், மோடியை, கண்டபடி விமர்சனம் செய்து, பேசி வருகிறார்.


இந்நிலையில், மோடியின் பேட்டி, மக்களிடையே, பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாம். 'ஒரு பக்கம் திட்டு, மறுபக்கம் ஸ்வீட்டா' என, அவருடைய கட்சியினரே, குழப்பத்தில் இருக்கிறார்களாம். ஒவ்வொரு பெங்காலி வருடப் பிறப்பன்றும், மோடிக்கு, ரசகுல்லா மற்றும் குர்தாவை அன்பளிப்பாக அனுப்பி வருகிறார் மம்தா. இந்த விஷயம், யாருக்குமே தெரியாதாம். அப்படியிருக்க, இதை போட்டு கொடுத்து விட்டாரே மோடி என, எரிச்சலில் உள்ளார் மம்தா.


ஒரு கூட்டத்தில் பேசிய அவர், இனிமேல் ரசகுல்லாவில், கல் வைத்து மோடிக்கு அனுப்புவேன்; அதை சாப்பிட்டு, அவருடைய பல், உடைந்து போகும் என, காட்டமாக பேசி உள்ளார். இதை கேட்டு, கட்சியினர் அதிர்ந்து போயுள்ளனர்.மம்தா எதற்கு இப்படி பேசுகிறார், இந்த அன்பளிப்பு விஷயத்தை, நம்மிடம் சொல்லியிருந்தால், சரியான முறையில் கையாண்டிருக்கலாமே என, வருத்தப்படுகின்றனர், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)