வாரணாசியில் மோடி செய்த சாதனைகள்

வாரணாசி: வாரணாசியில் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மோடி அத்தொகுதிக்கு ஏராளமான பணிகளை மேற்கொண்டுள்ளார்.


கடந்த 2014 -ல் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மோடி உ.பி.,யில் உள்ள வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது, ஜப்பானில் கோயில் நிறைந்த, கியோடோ நகரை போல் வாரணாசியை மாற்றுவேன் என உறுதியளித்திருந்தார். இதற்காக அவர் பல திட்டங்களை துவக்கி வைத்தார். தற்போது நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் மீண்டும் அதேதொகுதியில் போட்டியிடுகிறார்.

அங்கு அவரது செய்த சில சாதனைகள்


கங்கை நதியில் முனையம்
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் முதன்முறையாக , வாரணாசியில் நீர்வழி போக்குவரத்து கடந்த ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. வாரணாசியில், கங்கை நதியில் இந்தியாவின் நவீனமான முனையத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இங்கு, கோல்கட்டாவில் இருந்து முதல் சரக்கு பெட்டக போக்குவரத்து நடந்தது. இதில் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் வந்தன. உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஜல் மார்க் விகாஸ்திட்டத்தின்படி, அமைக்கப்படும் நான்கு நவீன முனையங்களில் முதலாவது ஆகும்.

சாலைகள்கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.1,571.95 கோடி செலவில் 34 கி.மீ தொலைவிற்கு அமைக்கப்பட்ட இரண்டு முக்கிய சாலை திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில், 16.55 கி.மீ., தொலைவிற்கு , ரூ.759.36 கோடி செலவில் அமைக்கப்பட்ட முதல்கட்ட வாரணாசி ரிங்ரோடையும், ரூ.812.59 கோடி செலவில் 16.25 கி.மீ., தூரத்திற்கு பாபாத்புத் - வாரணாசி இடையிலான 4 வழிச்சாலை திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார்.ரிங் ரோடானது, இரண்டு ரயில் மேம்பாங்கள் மற்றும் மேம்பாலம் ஆகியவற்றை கொண்டது. இதன் மூலம், நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து, பயண நேரம் மற்றும் எரிபொருள் பயன்பாடு சுற்றுச்சூழல் மாசு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபாத்புர் விமான நிலைய நெடுஞ்சாலையானது, நகரையும் விமான நிலையத்தையும் இணைக்கும். மேலும், ஜாவுன்புர், சுல்தான்பூர் மற்றும் லக்னோவையும் இணைக்கும். இதில் ஹர்ஹூவாவில் மேம்பாலம், டர்னா நகரில் ரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரணாசியில் இருந்து விமான நிலையம் செல்லும் பயண நேரம் குறையும். இதனால், அங்கு வசிக்கும் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பயனாக இருக்கும்.கிழக்கு உ.பி.,யுடன் வாரணாசியைஇணைக்கும் வகையில் ரூ.2,833 கி.மீ., தூரத்திற்கு ரூ.63,885 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் வாரணாசி - ஜாவுன்பூர், வாரணாசி - சுல்தான்பூர், சுல்தான்பூர் - லக்னோ இடையிலான சாலை அமைக்கப்பட்டு வருகின்றன.

மோடியின் கனவு திட்டம்காசி விஸ்வநாதர் கோயில் முதல் கங்கை நதி படித்துறை வரை நவீன நடைபாதை அமைப்பது
பிரதமர் மோடியின் கனவு திட்டமாகும். இதன் மூலம் வாரணாசி வரும் பக்தர்களுக்கு பெரிய வசதியை ஏற்படுத்தி தரும். இதன் மூலம் படித்துறைகளில் இருந்து கங்கை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பக்தர்கள் , எவ்வித சிக்கல், இடையூறு இன்றி வர வாய்ப்பை ஏற்படுத்தி தரும். ரூ.600 கோடி மதிப்பிலான இந்த திட்டம், இந்த ஆண்டு இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 166 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. 46 பழமையான கோயில்கள் மற்றும் தொன்மை வாய்ந்த கட்டடங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த பாதையானது, 300 மீ., தூரத்திற்கு 56 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்படுகிறது. இங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் தீத்தடுப்பு சாதனங்கள், மருத்துவ வசதிகள் அமைக்கப்பட உள்ளன. கோயிலை சுற்றி உலக தர அளவிலான சேவை கிடைக்க இந்த திட்டத்தில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கங்கை நதி தூய்மைபடுத்தும் பணிகங்கை நதி தூய்மைபடுத்தும் திட்டத்தின் கீழ், வாரணாசிக்கு ரூ.913 கோடி மதிப்பில் 13 திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ஜவஹர்லால் நேரு ஊரக மேம்பாட்டு திட்டம் மற்றும் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.703.14 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த 1986 ல் ஜூன் 14 ல் கங்கை நதியை தூய்மைபடுத்துவதற்கான திட்டம் கடந்த 1986 ல் திட்டமிடப்பட்டது. நிதின் கட்காரி தலைமையில், கங்கை நதி உயிர்பித்தல் துறை சார்பில், கங்கை தூய்மைபடுத்துவதற்கான தேசிய இயக்கம், வாரணாசியில், கங்கை நதியில் கலக்கும் கழிவுநீரை தடுப்பதற்கான பல திட்டங்களை செய்துள்ளது. தினமும் 40 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்தகரிப்பதற்கான நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற உள்ளது. வரும் நவம்பருக்குள் முடிவடையும். இதன் மூலம், கங்கை நதியில் கழிவு நீர் தடுக்கப்படுவதுதடுக்கப்படும். கோய்தா என்ற இடத்தில், தினமும், 120 மில்லியன் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான நிலையமும் அமைக்கப்பட உள்ளது. இதனை 412 மில்லியன் லிட்டர் திறனிற்கு உயர்த்தும் திட்டமும் உள்ளது.

குழாய் மூலம் எரிவாயுகடந்த ஆண்டு பிரதமர் மோடி குழாய் மூலம் எரிவாயு வழங்கும் வாரணாசி நகர காஸ் விநியோகம்(சிஜிடி) நெட்வொர்க் திட்டத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம் நகரவாசிகள், கிராம மக்கள், போக்குவரத்து துறையினர். மற்றும் தொழில்துறையினருக்கு பைப் மூலம் காஸ் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2016 ல் அடிக்கல் நாட்டினார். கெயில் நிறுவனம் சார்பில், ரூ.755 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சிஜிடி நெட்வொர்க் 1.535 சதுர கி.மீ., தொலைவில் 36.75 லட்சம் மக்களுக்கு சேவை செய்யும் திறன் பெற்றது.

வயர்லெஸ் நகரம்வாரணாசி நகரம், மின்வசதி பெற்ற 86 ஆண்டுகளுக்கு பிறகு, 16 சதுர கி.மீ., தூரத்திற்கு தரையில் மின் வயர்கள் பதிக்கப்பட்டு வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இது கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது. பழமையான நகரத்தில் 50 ஆயிரம் பேர் பயனடையும் வகையில், தரைக்கடியில் மின்வயர்கள் பதித்து மின்சாரம் வழங்குவது சவாலான காரியம். இதனை இரண்டு ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது.

கேன்சர் சிகிச்சை மையம்கடந்த ஆண்டு ஹோமி பாபா கேன்சர் மருத்துவமனையை, வாரணாசியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.இதனை டாடா நினைவு டிரஸ்டி நடத்தி வருகிறது. உ.பி., மற்றும் பீஹார் மக்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் கேன்சர் மையத்தை, டாடா நிறுவனம் எடுத்து , நவீன சாதனங்கள் ,இயந்திரங்கள் அமைத்து நவீனபடுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து, பனாரஸ் இந்துபல்கலையில், மற்றொருகேன்சர் சிகிச்சை மையத்தையும்டாடா நினைவகம் டிரஸ்டி அமைத்துள்ளது. மஹானாமா பண்டிட் மத்ன மோகன் மாலவியா கேன்சர் சிகிச்சை மையமும் 352 படுக்கை வசதிகளுடன் 10 மாதத்தில்கட்டி முடிக்கப்பட்டது.

நவீன கூட்ட அரங்கம்1.200 பேர் அமரும் வகையில், நவீன கூட்ட அரங்கம் ஒன்றுவாரணாசியில் ஜப்பான் அரசு உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.130 கோடியாகும். இதில், 120 கார்கள் நிறுத்தும் வசதி, ஆலோசனை அறை, பார்வையாளர்கள் அமரும் அறை ஆகியவை உள்ளன.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)