3 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கினால் தேர்தலை சந்திக்க, அ.ம.மு.க., முடிவு

சென்னை : ''எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரை, தகுதி நீக்கம் செய்தால், நீதிமன்றம் செல்லாமல், தேர்தலை சந்திப்போம்,'' என, அ.ம.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஆட்சியை தக்க வைக்க, குறுக்கு வழியில் முயல்கின்றனர். அதற்கு, சபாநாயகர் துணை போகிறார். அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். 'சபாநாயகர்மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்' என, ஸ்டாலின் அவசரப்பட்டு பேசுகிறார்.இடைத்தேர்தல் முடிவுகள் வந்த பின் தான், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சக்திஉள்ளதா என்பது தெரியும்.

ஏற்கனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, ஸ்டாலின் தோல்வி அடைந்தார். சட்டசபை எப்போது கூடுமோ, அப்போது தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியும். அ.தி.மு.க.,வில் நிறைய கோஷ்டி பூசல்கள் உள்ளன. எங்கள் நண்பர்கள், ஸ்லீப்பர் செல்களாக, அங்கு உள்ளனர். அவர்களில் சிலர் அமைச்சர்கள். நாங்கள், 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், அவர்கள் உதவியுடன் ஆட்சியை பிடிப்போம்.நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள, மூன்று பேரும் எங்கள் நண்பர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. அவர்கள், அ.தி.மு.க., அம்மா அணியில் இருந்தனர். அ.ம.மு.க., என்ற கட்சி ஆரம்பித்த பின், அவர்கள் இல்லை.அதைமீறி, ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுத்தால், அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். நீதிமன்றம் செல்லாமல், தேர்தலை சந்திப்போம். அதில், வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என, கூறுவோம். அவர்களுக்கு, அ.ம.மு.க., சார்பில், 'சீட்' கொடுக்க தயாராக உள்ளோம். அவர்கள் முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு, வெற்றிவேல் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)