தாசில்தார் பலிகடா தூண்டுதல் யார்: கேட்கிறார் முத்தரசன்

காரைக்குடி: ''மதுரை தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்த பிரச்னையில் துாண்டுதலாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என இந்திய கம்யூ., மாநில தலைவர் முத்தரசன் கூறினார்.


அவர் கூறியதாவது:ஓட்டு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த தாசில்தாரை அனுப்பியது யார், அதற்கு யார் காரணம் என வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். தாசில்தார் மீது மட்டும் நடவடிக்கை போதாது. ஓட்டு எண்ணிக்கை சரியான முறையில் நடக்குமா என்ற அச்சம் உள்ளது.பொன்பரப்பி மோதலை கண்டித்து நான் பேசியதை தவறாக சித்தரித்து, 'வன்னியர்களை சுட வேண்டும்' என நான் கூறியதாக சமூக ஊடகங்களில் பரப்பினர். பலர் என்னை தொடர்பு கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர். இப்படிப்பட்ட அவதுாறுகளை பரப்ப வேண்டாம்.அரசு ஊழியர்களே குழந்தை கடத்தலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 30 ஆண்டுகளாக குழந்தைகளை கடத்தி நிறத்திற்கு ஏற்ப விற்றது கொடூரமானது. அரசு விழிப்பாக இல்லை என்பது தெரிகிறது. இலங்கை குண்டுவெடிப்புகளுக்கு எந்த அமைப்பு காரணமாக இருந்தாலும் தனிமைப்படுத்த வேண்டும், என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)