3 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்க பரிந்துரை

சென்னை: தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் மேலும் 3 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்னசபாபதி ஆகியோர் மீது உரிய ஆதாரங்களுடன் சபாநாயகரிடம் வழங்கியுள்ளோம். அதன் அடிப்படையில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார். தினகரனுடன் தொடர்பில் இருந்து வீடியோ, புகைப்பட ஆதாரமும் வழங்கியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் இன்று காலை தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.
சட்டமன்றத்தில் இப்போது அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேர் செயல்படுகின்றனர்.

இவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்ற யூகங்கள் அரசியல் அரங்கில் எழுந்துள்ளதால், அரசியல் அரங்கில் இந்த சந்திப்பு பரபரப்பாக பேசப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் பொதுத்தேர்தலுடன், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. வரும் மே 19 ல் மீதி 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இதன் முடிவுகளைப் பொறுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்புதல் மற்றும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வேறு வாய்ப்புகள் குறித்தும் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
3 பேருக்கு நோட்டீஸ் ?
இந்த நிலையில், ஆட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாக கருதப்படும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேருக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்புவார் என தெரிகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)