வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ஷாலினி யாதவ்

லக்னோ: வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடிக்கு எதிராக, சமாஜ்வாதி கட்சி சார்பில், ஷாலினி யாதவ் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மே, 19:



முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், மொத்தம் உள்ள, 80 லோக்சபா தொகுதிகளுக்கும், ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த மூன்று கட்ட தேர்தலில், 26 தொகுதிகளுக்கு, தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி, இம்முறையும், வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், மே, 19ல் தேர்தல் நடக்கிறது.

பிரதமர் மோடியை எதிர்த்து, காங்., சார்பில், அக்கட்சியின் கிழக்கு உத்தர பிரதேச பொதுச் செயல ரும், கட்சியின் தலைவர் ராகுலின் சகோதரியுமான, பிரியங்கா போட்டியிடுவார் என, கூறப்படுகிறது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடிக்கு எதிராக, ஷாலினி யாதவ் போட்டியிடுவார் என, சமாஜ்வாதி கட்சி நேற்று அறிவித்தது.

புதிய வேட்பாளர்:



ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்த, ஷியாம் லால் யாதவின் மருமகளான ஷாலினி, நேற்று முன்தினம், காங்கிரசிலிருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். மாநிலத்தில், 2017ல் நடந்த உள்ளாட்சி தேர்த லில், வாரணாசி நகராட்சி தலைவர் பதவிக்கு, காங்., சார்பில் போட்டியிட்டு, ஷாலினி தோல்வியடைந்தார்.

ஷாலினி யாதவ் கூறுகையில், ''அகிலேஷ் யாதவ் தலைமையில், கட்சி பணியாற்றுவேன். அவருடைய உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவேன்,'' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)