ஓட்டு எண்ணிக்கைக்கு மத்திய பார்வையாளர்

மதுரை : 'ஓட்டு எண்ணிக்கை மையத்தில் யார் உத்தரவின்படி தாசில்தார் சம்பூர்ணம் உட்பட அதிகாரிகள் சென்றது குறித்து விசாரிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நியாயமான முறையில் நடக்க மத்திய பார்வையாளரை நியமிக்க வேண்டும்,' என, மதுரை தொகுதி வேட்பாளர்கள் தெரிவித்தனர்.மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏப்., 20 அனுமதியின்றி தாசில்தார் சம்பூர்ணம் மற்றும் அலுவலர்கள் நுழைந்தது குறித்து நேற்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி விசாரித்தார்.

வேட்பாளர்கள், ஏஜன்ட்களிடம் விசாரித்தார். சில வேட்பாளர்கள் தரப்பில், 'உயரதிகாரிகள் அனுமதியின்றி தாசில்தார் மற்றும் அலுவலர்கள் சென்றிருக்க முடியாது. ஆவணங்கள் வைக்கப்பட்ட அறையை சீல் வைக்காதது ஏன். தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் குறித்த விவரம் கட்சி ஏஜன்ட்களிடம் இருக்கும். பிறகு எதற்காக மேற்கு தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் குறித்த விண்ணப்பம் எண் 20 எடுக்க சென்றனர். இதில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரிக்க வேண்டும்,' என கூறினர்.பிறகு வேட்பாளர்கள் கூறியதாவது....தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை ராஜ்சத்யன், அ.தி.மு.க., வேட்பாளர்: அனுமதியின்றி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் சென்றது தவறு. விசாரித்து சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

தேர்தல் கமிஷன் மீது முழு நம்பிக்கையுள்ளது.தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் வேட்பாளர்: ஏப்., 20 சம்பவம் குறித்து நான்கு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தெரியாமல் அவர்கள் சென்றிருக்க முடியாது. தெரியாது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்ததை ஏற்க இயலாது. ஓட்டு எண்ணிக்கை சுமூகமாக நடக்க அவரை மாற்ற வேண்டும்.தவறு செய்தால் நடவடிக்கைசரவணக்குமார், ம.நீ.ம., ஏஜன்ட்: ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மட்டுமின்றி ஓட்டுப்பதிவு தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்ட அறைக்கும் சீல் வைத்திருக்க வேண்டும்.
மத்திய பார்வையாளர் டேவிட் அண்ணாத்துரை, அ.ம.மு.க., வேட்பாளர்: ஓட்டு எண்ணிக்கை சுமூகமாக நடக்க மத்திய சிறப்பு பார்வையாளரை நியமிக்க வேண்டும். அனுமதியின்றி நுழைந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எல்லா தரப்பினரிடமும் விசாரணை கோபாலகிருஷ்ணன், சுயே., வேட்பாளர் : தாசில்தார் உள் நோக்கத்துடன் மையத்திற்குள் செல்லவில்லை என மற்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அனைத்து அதிகாரிகள், எல்லா கட்சியினரையும் முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேம்போக்காக விசாரிக்க கூடாது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)