ரபேல் தீர்ப்பு குறித்த கருத்து வருத்தம் தெரிவித்தார் ராகுல்

புதுடில்லி : 'ரபேல்' போர் விமானம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியதற்கு, காங்கிரஸ்தலைவர், ராகுல், உச்ச நீதிமன்றத்தில் வருத்தம்தெரிவித்துள்ளார்.'ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், எந்த முறைகேடும் நடக்கவில்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், பத்திரிகைகளில் வெளியான, செய்திகளில் குறிப்பிட்டிருந்த சில ஆவணங்கள், ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.

நீதிமன்ற அவமதிப்பு'ராணுவ அமைச்சகத்தில் இருந்து,திருட்டுத்தனமாக நகல் எடுக்கப்பட்டதால், அந்த ஆவணங்களின் அடிப்படையில், விசாரிக்கக் கூடாது' என, மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த,உச்ச நீதிமன்றம், அந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக கூறியது.அப்போது இது குறித்து, காங்., தலைவர், ராகுல் கருத்து தெரிவித்திருந்தார். 'தன்னை நாட்டின் காவல்காரனாக கூறிக் கொள்ளும், பிரதமர் நரேந்திர மோடி, ஒரு திருடன் என்பதை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது' என, அவர் கூறியிருந்தார்.நீதிமன்றம் கூறாததை, திரித்துக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக, பா.ஜ., பெண்,எம்.பி., மீனாட்சி லேகி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

'எந்த ஒரு வழக்கிலும், நீதிமன்றம் கூறாததை,தங்களுடைய அரசியல் லாபத்துக்காக, நீதிமன்றம் கூறியதுபோல், திரித்து கூறக் கூடாது. இது தொடர்பாக, 22க்குள், ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில், ராகுல் சார்பில், நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ள தாவது:தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்தரப்பு தவறுதலாக பயன்படுத்துகிறது.

நீதிமன்றத்துக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில், இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்தக் கருத்தை கூறியதற்காக, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று மீண்டும்அதே நேரத்தில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பு வெளியானபோது, தங்கள் மீது தவறு ஏதுமில்லை என, உச்ச நீதிமன்றம் சான்று அளித்துள்ளது என, பா.ஜ.,வும், மத்திய அரசும் கூறின.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.இந்த வழக்கு, இன்று, விசாரணைக்கு வருகிறது.இதற்கிடையே, 2016, அக்., 6ல், உத்தர பிரதேசத்தில் நடந்த பேரணியின்போது, 'ஜம்மு - காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை, சுயலாபத்துக்காக, பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்' என, ராகுல் பேசினார்.
அதையடுத்து, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ராகுலுக்கு எதிராக, தேசவிரோதமாக கருத்து தெரிவித்ததாக, வழக்கு தொடரப்பட்டிருந்தது.'எம்.பி.,யாக உள்ள ராகுலுக்கு எதிரான வழக்கை, விசாரிக்கும் அதிகாரம், இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. அதனால், இந்த வழக்கு, மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது' என, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கூறியுள்ளது.

பா.ஜ., விமர்சனம்ரபேல் தொடர்பான வழக்கில், காங்., தலைவர் ராகுல், உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர், ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறியதாவது:நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து, மனு தாக்கல் செய்துள்ளதன் மூலம், பிரதமர் மோடி குறித்து தான் பொய்யான தகவலை கூறியதை, ராகுல் ஒப்புக் கொண்டுள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பொய்களை தயாரிக்க, ராகுல் முயன்றுள்ளார். இதற்காக, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்., செய்தித் தொடர்பாளர், ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:பொய்களுக்கு எல்லையில்லை என்பதை, பா.ஜ., மீண்டும் நிரூபித்து உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், ராகுல் பதில் மனு தாக்கல் செய்ததை, தனக்கு சாதகமாக, பா.ஜ., திரித்து கூறியுள்ளது. இந்த வழக்கு, தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அதனால், இதில் முரண்பாடான கருத்து தெரிவிப்பதும், நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை, பா.ஜ., உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)