'சமூகத்தை இழிவு செய்வதை தடுக்க வேண்டும்'

சென்னை : 'வலைதளங்களை பயன்படுத்தி, சமூகங்களை இழிவுப்படுத்துவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலர், தினகரன் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் பரவிய, மிக மோசமான, 'வாட்ஸ் ஆப் ஆடியோ' அப்பகுதியில், பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.அதற்கு காரணமான விஷமிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவல்துறை சரியாக செயல்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட மக்கள், தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை வந்திருக்காது.
இதை, ஒரு பாடமாக எடுத்து, கருத்து சுதந்திரம் என்ற பெயரில், குறிப்பிட்ட சமூகங்களையோ, தனி நபர்களையோ குறி வைத்து, சமூக வலைதளங்களில், இழிவு பிரசாரம் செய்யப்படுவதை தடுக்க, காவல் துறை உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதிலும், ஜாதி, மத அடிப்படையில் பரப்பப்படும் அவதுாறுகளை, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.இவ்வாறு, கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)