ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த அதிகாரி சஸ்பெண்ட்

மதுரை: மதுரையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள் அறைக்குள் நுழைந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டு மின்னணு இயந்திரங்கள் மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.இங்குள்ள அறைக்குள் பெண் தேர்தல் அலுவலர் சம்பூர்ணம் நுழைந்துள்ளார். அங்கு இருந்த ஓட்டு பெட்டிகள் தொடர்பான நகல்கள் எடுத்துள்ளார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதனையடுத்து அங்கு திமுக, இடதுசாரி, அமமுகவினர் கூடினர். பெண் அதிகாரி வந்தது குறித்து அரசியல் கட்சியினர் சந்தேகம் எழுப்பினர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.


இது குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறுகையில்; ஸ்டோர் அறையில் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளேன். முழு தகவல் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றார்.


மதுரை மார்க்., கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன் கூறியதாவது: மதுரை மேற்கு தொகுதி பொருட்கள் அறையில் 3 பேர் வந்து சில ஆவணங்களை பார்த்துள்ளனர். காவல்துறை விசாரணைக்கு பின்னர் அவர்களிடம் எவ்வித அனுமதிக்கான உரிமம் இல்லை என தெரிய வந்தது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு இன்னும் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிலையில், அந்த பெண் அதிகாரி சம்பூரணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு கலெக்டர் நடராஜன் அனுப்பி வைத்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், வாக்கு இயந்திரம், தபால் வாக்குகள் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழையவில்லை; அவர் சென்ற அறை ஸ்டோர் ரூம். பெண் அதிகாரி அறைக்குள் நுழைந்தது சென்றது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அறிக்கை கிடைத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-ஏப்-2019 05:53 Report Abuse
D.Ambujavalli அவர் வேண்டிய குறிப்புகளை எடுத்து, அனுப்பியவர்களுக்கு பாஸ் செய்தாயிருக்கும். அவருக்குப் ‘பேசப்பட்டது’ போய் சேர்ந்திருக்கும் எத்தனை தொகுதியின் ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டனவோ, சும்மா அவர் ஸ்ட்ராங் ரூமுக்குச் செல்லவில்லை என்கிறார். இதிலிருந்து தெரிவது : சில வீக்கான தொகுதிகளின் மிஷின்கள் அப்புறப்படுத்தப்பட்டு பக்காவான சில Replace செய்யப்படுமா, எதோ பெரிய சதி உள்ளது. அந்தம்மா ஒன்றும் தெரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல் அறை மாறி வரவில்லை எலெக்ஷன் கமிஷனருக்கு சப்பைக்கட்டுவதை பார்த்தால் கூட்டுச் சதியென்றே தோன்றுகிறது ரிசல்ட் வந்ததும் பெரிய பூகம்பம் வெடிக்கும்
a.s.jayachandran - chidambaram,இந்தியா
22-ஏப்-2019 00:35 Report Abuse
a.s.jayachandran முதலில் 5 ஆண்டுகள் முடிந்ததும் ஆட்சியை கலைத்துவிடவேண்டும்.தேர்தல் முடியும் வரை ராணுவத்தின் ஆட்சியை கொண்டுவரவேண்டும்.யார் தேர்தலில் வெற்றிபெறுகிறார்களோ அவர்களை ஆட்சி அமைக்க சொல்லவேண்டும்.அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தேர்தல் நடத்தினால் இதுபோலத்தான் நடக்கும்.இந்த தாசில்தார் வருங்காலத்தில் மாவட்ட ஆட்சியர் பதவி உயர்வு பெறுவது நிச்சயம்.
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-ஏப்-2019 19:27 Report Abuse
Malick Raja எல்லாம் கோல்மால் கும்பல்கள் வேலைககளாக இருக்கும் .. உண்மை மட்டுமே வெல்லும் . பொய் வெல்வது போல இருப்பினும் வீழந்து அழிவது மட்டும் உறுதி ...சூழ்ச்சிகள் நிலைத்ததாக சரித்திரம் இல்லை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஏப்-2019 18:25 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //மதுரையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள் அறைக்குள் நுழைந்த அதிகாரி சஸ்பெண்ட்// சதிகாரி.. அந்த சதிகாரி எந்த சர்வாதிகாரிக்காக இதை செய்தா?
oce - chennai,இந்தியா
21-ஏப்-2019 17:22 Report Abuse
oce ஏற்கனவே சுடலை இதற்கு முன் கொரட்டூர் தொகுதி தேர்வில் நின்று ஜெயிப்பத்ற்கு முன்னால் ஒரு நாள் தான் நின்ற தொகுதியில் மின் அணு வாக்குப்பெட்டிகள் வைத்திருந்த அறைகளுக்குள் அடிக்கடி போய் வந்திருக்கிறார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கின்றன. அதை கவனிக்காமல் விட்டவர்களே இதையும் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.
oce - chennai,இந்தியா
21-ஏப்-2019 17:13 Report Abuse
oce சீல் வைப்பதற்கு முன்னரே அந்த அறையிலிருந்து அடுத்த அறைக்கு ஆவணங்களை மாற்றி இருக்கலாமல்லவா.
oce - chennai,இந்தியா
21-ஏப்-2019 17:10 Report Abuse
oce ஆவணங்களை எடுத்து பார்த்த அந்த மூன்று பேர் யார். அவர்களையும் கண்டு பிடித்து முட்டிக்கு முட்டி தட்டி நடக்க முடியாதவாறு முட்டி சிப்பியை உடைத்தனுப்ப வேண்டும்.
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஏப்-2019 15:57 Report Abuse
S.Baliah Seer ஸ்டோர்ரூம், ஸ்ட்ராங் ரூம் என்ற பிரிவு எதற்கு?தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹு அந்த ரூம் சீல் வைக்கப்படாததற்கு சரியான காரணங்களை சொல்லவில்லை.இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஏன் தேர்தல் நடத்தவில்லை என்பதன் காரணம் இப்போதுதான் புரிகிறது.ஒரு சாதாரண தாசில்தார் கூட வாக்கு பாதுகாப்பு பெட்டக அறையில் நுழையலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.இதில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் அனுமதி பெற்று நுழையலாம் என்பதும் ஏற்க முடியாத ஒன்று.ஒவ்வொரு கட்சியும் தம் கட்சி ஏஜெண்டுகளை பாதுகாப்புக்கு வைத்திருப்பார்களே அவர்கள் குவாட்டரை அடித்துவிட்டு கோழிக்கறிக்கு பறந்துவிட்டார்களா என்ன?எப்படியோ அந்த தாசில்தார் பெண்மணியால் ஒரு பெரிய விஷயம் முச்சந்திக்கு வந்துவிட்டது.
சுந்தரம் - Kuwait,குவைத்
21-ஏப்-2019 16:26Report Abuse
சுந்தரம் எதற்கோ முயன்று எதுவோ நடந்துவிட்டது. முச்சந்திக்கு வந்தது ஒரு சிறு துளிதான். மூடி மறைக்கப்பட்டது .......?...
21-ஏப்-2019 15:56 Report Abuse
ஆப்பு சஸ்பெண்ட் தான் செய்வார்கள்.. எதுக்காக உள்ளே போனார்னு இவிங்களும் கேக்க மாட்டார்கள். அவரும் சொல்லமாட்டார்..கோழி அமுக்கற மாதிரி அமுக்கிருவாங்க...
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஏப்-2019 14:38 Report Abuse
Bhaskaran அதிகாரி செய்தது மாபெரும் தவறு இதற்கு துணைபோனவர்கள் கண்டிப்பாக கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும் தேர்தலில் போட்டி என்பது வேறு விஷயம் இம்மாதிரி கேவலமாக வாக்குப்பெட்டிகளில் தில்லுமுள்ளுச்செய்வதாக இருந்தால் எதற்கு தேர்தல் எதிர்கட்சிக்கு வாக்களித்தவன் எல்லாம் கேனயனா
மேலும் 15 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)