மோடி மீண்டும் பிரதமராக'புல்லட் பைக்'கில் பயணம்: தமிழக பெண்ணுக்கு ஜார்க்கண்டில் வரவேற்பு

‛பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வர வேண்டும்' என, 'புல்லட்' மோட்டார் சைக்கிளில், 30 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து, பிரசாரம் மேற்கொண்டு, தமிழக பெண் சாதனை புரிந்துள்ளார்.


நாடு முழுவதும், லோக்சபா தேர்தல் களை கட்டியுள்ளது. மொத்தம், ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கும் நிலையில், இதுவரை, இரண்டு கட்டங் களுக்கு ஓட்டுப்பதிவு முடிந்துஉள்ளது; இன்னும், ஐந்து கட்டங்களுக்கு நடக்க வேண்டி உள்ளது.இந்நிலையில், பிரதமராக மீண்டும் மோடியே வர வேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தை சேர்ந்த, பா.ஜ., ஆதரவு பெண் ராஜலஷ்மி என்பவர், மோட்டார் சைக்கிளில் நாடு தழுவிய பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். புல்லட் மோட்டார் சைக்கிளில், தமிழகத்தில் இருந்து பயணத்தை துவங்கிய, ராஜலஷ்மி, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சமீபத்தில் வந்தார்.


இரும்பு நகரம் என்று சொல்லப் படும், ஜாம்ஷெட்பூர் நகருக்கு வந்த ராஜலஷ்மி மற்றும் 25 பேர் அடங்கிய அவரது குழுவினருக்கு, உள்ளூர், பா.ஜ.,வினர் வரவேற்பு அளித்தனர்.'ஒவ்வொரு இதயத்திலும் மோடி; ஒவ்வொரு வீட்டிலும் மோடி' என, அவர் முழக்கமிட்டு, பா.ஜ.,வினரை உற்சாகப்படுத்தினார்.


தன் பயணம் குறித்து, நிருபர்களிடம் ராஜலஷ்மி கூறியதாவது:இதுவரை, 30 ஆயிரம் கி.மீ., புல்லட் மோட்டார் சைக்கிளில் பயணித்து உள்ளோம். மோடியை ஆதரித்து, எங்கள் பயணம் தொடர்கிறது. மோடியின் ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்துக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பெண் குழந்தைகளை பாது காக்கவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டவும், பல திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டது. ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்தமாக வீடு கட்டி கொள்ள, எளிதாக கடன் வசதி கிடைத்துள்ளது. அதில் பயனடைந்தவர்களில் நானும் ஒருவர்.இவ்வாறு அவர் கூறினார்.


ராஜலஷ்மியின் பயணம், 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என, பா.ஜ.,வினர் தெரிவித்துஉள்ளனர்.

- ஜெ.கன்னையா
-சிறப்பு செய்தியாளர்


sams - Palakkad,இந்தியா
22-ஏப்-2019 08:24 Report Abuse
sams காங்+290win
sams - Palakkad,இந்தியா
22-ஏப்-2019 08:24 Report Abuse
sams cong+290 வின்
sams - Palakkad,இந்தியா
22-ஏப்-2019 08:23 Report Abuse
sams con+290win
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-2019 03:42 Report Abuse
J.V. Iyer அம்மணி உங்கள் எண்ணம் ஈடேறும். எல்லா இடங்களிலும் மோடிஜி, பாஜக, பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெரும். இறைவன் அருள் தமிழ் நாட்டில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும்... வெற்றி..
Girija - Chennai,இந்தியா
22-ஏப்-2019 01:38 Report Abuse
Girija காசு இருந்தால் கழிவறையிலும் ஏ சி வச்சுக்கலாம்
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-ஏப்-2019 19:46 Report Abuse
Malick Raja
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-ஏப்-2019 19:45 Report Abuse
Malick Raja
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஏப்-2019 18:32 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இருக்கிற பெட்ரோல் விலையில் நடுத்தர குடும்பங்களில் இருசக்கர வண்டிக்கு ஆயுத பூஜை அன்னிக்கி வெளிச்சம் காட்டி, குளிப்பாட்டி, போட்டு வெச்சி, மணியாட்டி மறுபடியும் மூடி வைக்கும் நிலையில் தான் நாட்டு நடப்பு உள்ளது..
Bharatha Nesan - Chennai,இந்தியா
21-ஏப்-2019 18:07 Report Abuse
Bharatha Nesan மீண்டும் பிரதமராக மோடி அவர்களே வரவேண்டும் என்பது தமிழ்நாட்டில் கோடி கணக்கான மக்களின் விருப்பம், கடவுள் கருணையால் அது நிறைவேறும்.
21-ஏப்-2019 16:16 Report Abuse
Sadagopan Manickam
மேலும் 40 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)