பா.ஜ.,வின் தந்திரம் பலிக்குமா?

மஹாகவி பாரதியார் உயிரோடு இருந்துஇருந்தால், 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று எழுதியதற்கு, வெட்கி தலைகுனிவார்.

தேர்தலில், வேட்பாளர் தேர்வில் இருந்து, வாக்காளர்கள் வரை, ஜாதி வேரூன்றி உள்ளது.ஹரியானாவில், ஜாட் சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில், அதே சமுதாயத்தை சேர்ந்த, முன்னாள் முதல்வர், புபேந்தர் சிங் ஹூடாவுக்கு, 'செக்' வைக்கும் வகையில், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களை, பா.ஜ., வேட்பாளர் களாக நிறுத்தியுள்ளது.

ஹரியானாவில் உள்ள, 10 தொகுதிகளுக்கு, மே, 12ல் தேர்தல் நடக்க உள்ளது. இதில், சோனிபட், ரோதக், ஜாஜிர் மாவட்டங்களில், ஜாட் சமுதாயத்தினர் அதிகம் உள்ளனர்.காங்.,கைச் சேர்ந்த முன்னாள் முதல்வர், புபேந்தர் சிங் ஹூடா, இந்தப் பகுதிகளில் செல்வாக்கு உள்ளவர்.கடந்த லோக்சபா தேர்தலில், தான் போட்டியிட்ட, எட்டு தொகுதிகளில் ஏழில், பா.ஜ., வென்றது. ரோதக் தொகுதியில், ஹூடாவின் மகன், தீபிந்தர் வென்றார். மீண்டும் அதே தொகுதியில், காங்., சார்பில் அவர் நிறுத்தப்பட்டு உள்ளார்.

இந்தத் தொகுதியில், காங்.,கில் இருந்து வந்த, அரவிந்த் சர்மாவை, பா.ஜ., நிறுத்தியுள்ளது; இவர், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.அதே போல, சோனிபட் தொகுதியில், கடந்த தேர்தலில் வென்ற, பிராமண வகுப்பைச் சேர்ந்த, ரமேஷ் கவுசிக்கை, பா.ஜ., மீண்டும் நிறுத்தியுள்ளது.ஜாட் மற்றும் ஜாட் அல்லாதவர்கள், இந்தத் தொகுதிகளில், பிராமண வேட்பாளர் களுக்கு ஓட்டுகள் அளித்து, வெற்றி பெற வைத்துள்ளனர். அதை மனதில் கொண்டே, பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களை, பா.ஜ., நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


ஹரியானா மட்டுமின்றி, நாடு முழுதும் இதே நிலைமை தான். பெரும்பான்மை ஜாதியினர் தான் வேட்பாளராக நிறுத்தப்படுகின்றனர். அவர்களுக்குத் தான் கட்சிகளும், 'சீட்' வழங்குகின்றன.

-நமது நிருபர் -


S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஏப்-2019 16:03 Report Abuse
S.Baliah Seer பிராமணர்கள் பெரும்பான்மை வகுப்பினர் இல்லையே?இந்த செய்தியில் முன்னுக்குப்பின் முரண்பாடு உள்ளது.
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-ஏப்-2019 11:28 Report Abuse
அசோக்ராஜ் அடுத்தவனை சாதி மறுக்க சொல்பவனை இளைஞர்கள் நம்பக்கூடாது. அப்ரஹாமிய கொள்ளையர்களின் தந்திரம் இது. தனிமனிதனின் பாதுகாப்பிற்கு நீதிமன்றமோ, காவல்துறையோ, ஊடகத்துறையோ, மத குருமார்களோ என்றைக்கும் வரமாட்டார்கள். சாதிசனம்தான் ஒரே பாதுகாப்பு. மற்றப்படி இந்திய அரசியல் சட்ட அமைப்புக்கள் எல்லாம் பணம் படைத்தவர்க்கும் ரவுடிகளுக்கும் மட்டும்தான் உதவும். தனிமனிதன் சாதியை விட்டால் நிர்வாண நிலைதான்.
Suri - Chennai,இந்தியா
21-ஏப்-2019 10:33 Report Abuse
Suri பெரிய நியாயம், சிறிய நியாயம் என்று வியாக்கியானம் கூறுவார்கள்.
Suri - Chennai,இந்தியா
21-ஏப்-2019 10:29 Report Abuse
Suri
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-ஏப்-2019 10:25 Report Abuse
Malick Raja ... அத்தனையும் அழிந்து போகுமே என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமையின் விளைவு
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
21-ஏப்-2019 09:52 Report Abuse
Mohamed Ilyas மனிதர்களே நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, இறைவன் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
21-ஏப்-2019 09:12 Report Abuse
கதிரழகன், SSLC கெட்டவங்க எல்லா சாதியிலையும் இருக்காங்க. அவா எல்லாரும் உத்தமங்க இல்லாதான். ஆனா சாமி க்கு பயந்து நியாமா நடந்துகிறவங்க நெறைய இருக்காக அவா கிட்ட. விசுவாசத்தில் மிஞ்ச முடியாது அவாளை. அத்தினி அரசியல் வியாதிக்கும் அக்கவுண்டு யாரு, டாக்டர் யாருன்னு பாரு, அவா தான். இந்த கேடு கேட்ட திமுக அவாளை தாக்கினப்ப சும்மா இருந்திட்டம். இன்னிக்கும் நம்பள படுத்துது. திரும்ப அவாளை அவாளா இருக்க விட்டா போதும். நாடு விளங்கும்.
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-ஏப்-2019 08:34 Report Abuse
ஆரூர் ரங் நம் ஊர் போலல்லாமல் மேற்கு மற்றும் வடஇந்தியாவில் பாரம்பரியமாகவே விவசாயமும் வணிகமும் செய்யும் பிராமணர்களே அதிகம் .அவர்களில் பல விடுதலைப்போராட்ட தியாகிகள், சமூக செயல்பாட்டாளர்கள் , எழுத்தாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள். சாதியென்பதெலாம் சும்மா. கலப்பு மணத்திலும் நம்பர் ஒன் அவர்கள் சாதிசங்கத் போராட்டங்களில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை.ஒரு காலத்தில் காங்கிரஸ் தொடர்ந்து ஆளவும் அவர்களே காரணமாக இருந்தனர். இப்போது காங்கிரசுக்கு வேட்டுவைப்பதிலும் அவர்களே முதலிடம் . மற்ற உயர் சாதியினர் மோதி போன்ற பிற்பட்டவர் தலைமையை ஏற்கத்தயங்கும்போது அவர்கள்தான் முழுமூச்சாக ஆதரிக்கின்றனர் . நாடு மாறுவதன் அடையாளம் அது . ஜாட் சமுகத்தின் கோட்டை என்று தெரிந்தும் வேற்று சாதியினரை நிறுத்துவது சாதியொழிப்புக்கு உதவலாம்
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-ஏப்-2019 08:28 Report Abuse
ஆரூர் ரங் முந்தைய தேர்தல்களில் ஜெயலலிதாவும் .சிறுபான்மையினர் அதிகமுள்ள தொகுதிகளில் இந்து சிறு சாதியினரை நிறுத்தி வெற்றிபெற்றதுண்டு .இப்போதுகூட இந்துக்களின் விழிப்புணர்வால் கன்னியாகுமரியில் முதன்முதலாக இரு பெரும் கூட்டணிகளுமே கிறித்தவர்களை நிறுத்தாமல் இந்துக்களை நிறுத்தியுளளன. .ஒவ்வொரு தொகுதியிலும் குறைவான எண்ணிக்கையிலுள்ள சாதியினரை கட்சிகள் நிறுத்த த்துவங்கினாலே சாதிப்போர்கள் அடங்கத்துவங்கும்.ஒருவிதத்தில் தமிழகம் சாதனை படைத்தது 1969 முதல் 2016 வரை மிகச்சிறிய மக்கள்தொகையுள்ள சாதியினரே( கருணா, எம் ஜியார் ஜெயா) முதல்வராக இருந்தது வேறெங்கும் இல்லை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
21-ஏப்-2019 08:23 Report Abuse
K.   Shanmugasundararaj தேர்தல் கமிஷன் இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.ஆனால் தேர்தல் கமிஷன் எதுவும் செய்யாது.
மேலும் 8 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)