தந்தை மகனுக்காற்றும்

மஹாராஷ்டிராவில், காங்கிரசில் உள்ள தந்தை, பா.ஜ., சார்பில் போட்டியிடும் மகனுக்காக, மறைமுகமாக பிரசாரம் செய்கிறார்.

மஹாராஷ்டிராவில் உள்ள, 48 தொகுதிகளுக்கு, நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், அஹமது நகர் தொகுதியில், பா.ஜ., சார்பில், சுஜே பாட்டீல் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, சங்க்ராம் அருண் ஜக்தாப்பை, தேசியவாத காங்., நிறுத்தியுள்ளது.இந்தத் தொகுதியை தன் மகன், சுஜேவுக்கு ஒதுக்க வேண்டும் என, மஹாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள, மூத்த காங்., தலைவர், ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கோரியிருந்தார்

.ஆனால், கூட்டணி கட்சியான, தேசியவாத காங்.,குக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால், பாட்டீலுக்கு காங்கிரஸ் கை விரித்தது.ஏற்கனவே, பாட்டீலுக்கும், தேசியவாத காங்., தலைவர், சரத் பவாருக்கும் ஏழாம் பொருத்தம். அதனால் பாட்டீல் மகனுக்கு தொகுதியை விட்டுத் தர, சரத் பவார் மறுத்து விட்டார்.அதையடுத்து, பா.ஜ.,வில் சேர்ந்த சுஜே, இந்தத் தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.அப்போதே, 'மகனுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன். அதே போல், காங்., மற்றும் தேசியவாத காங்.,குக்கும் பிரசாரம் செய்ய மாட்டேன்' என, ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கூறியிருந்தார்.

நேரடி பிரசாரத்தில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், மகனுக்காக, திரைமறைவில் பிரசாரம் செய்து வருகிறார். முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்த, தன் தந்தை, பாலாசாகேப் விகே பாட்டீலின் ஆதரவாளர்களை, ராதாகிருஷ்ண பாட்டீல் சந்தித்துள்ளார்; மகனுக்கு ஆதரவு அளிக்கும்படி கூறியுள்ளார்.இதைத் தவிர, மகனுக்கு,தேர்தல் பிரசார வியூகங்களையும் அவர் வகுத்து தருகிறார். வரும், 23ல் இந்த தொகுதி மக்கள்,தேர்தலை சந்திக்கின்றனர்.
- நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)