தயார் நிலையில் தி.மு.க.,

புதுடில்லி: தமிழகத்தில், ஒரு வழியாக லோக்சபா தேர்தல் முடிந்தது. வெயிலில் அலைந்து, திரிந்து பிரசாரம் செய்த தலைவர்கள், ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றனர்.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற ஆளுமைகள், இல்லாமல் நடந்த, முதல் தேர்தலின் முடிவுகள், எப்படியிருக்கும் என, அனைவரும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தி.மு.க., தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.நடந்து முடிந்த தேர்தலின், கள நிலவரம், ராகுல் பிரசாரம் மற்றும் சாமானியரிடம் இருக்கும், மோடி எதிர்ப்பு மனநிலை, ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, மோடி 'அவுட்' என்கிறார், தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர்.

'மற்ற மாநிலங்களிலிருந்து, எங்களுக்கு வரும் செய்திகளும், மோடி மீண்டும் பிரதமராக முடியாது; காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என சொல்லும் நிலையில், நாங்கள் அமைச்சர்கள் ஆவோம்' என்கிறார் அவர்.தமிழகத்தில், பெரும்பான்மையான இடங்களில், வெற்றி உறுதி என, தி.மு.க.,வினர் சந்தோஷப்படுகின்றனர்.தி.மு.க., தரப்பிலிருந்து யார் யார் மத்திய அமைச்சராவர் என, இப்போதே விவாதம் தொடங்கி விட்டதாம். முக்கிய குடும்பத்திலிருந்து, எத்தனை பேருக்கு பதவி; ஒருவருக்கா அல்லது இருவருக்கா என, கட்சிக்குள் பட்டிமன்றம் நடந்து வருகிறது.



இன்னொரு பக்கம், தி.மு.க., தலைவர்கள் சிலர், இப்போதே, டில்லியில் வீடு தேட ஆரம்பித்து விட்டனர்.ஏற்கனவே, அமைச்சர் பதவி வகித்த, சில, தி.மு.க., பிரபலங்கள், டில்லியில், தங்களுக்கு எந்த இடத்தில் அரசு பங்களா வேண்டும் என முடிவு செய்துவிட்டனராம். 'ஏற்கனவே வசித்த வீட்டில் பிரச்னை, அது வேண்டாம், பார்லிமென்டிற்கு அருகில் வீடு கேட்க வேண்டும்' என, ஒருத்தர் முடிவெடுத்திருக்கிறாராம். இன்னொருவரோ, தான் முன்பு அமைச்சராக இருந்த போது, வசித்த பங்களாவே வேண்டும் என சொல்கிறாராம். இப்படி, தி.மு.க.,வைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 வரை காத்திருக்காமல், அலை எந்த பக்கம் என இப்போதே தெரிந்துவிட்டதாம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)