'நியாய்' வாக்குறுதி தோல்வியடையும்: மும்பை இளைஞர்கள் விளாசல்

'வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கும், காங்கிரசின், 'நியாய்' திட்டத்தால் மக்களின் வாழ்க்கை தரம் உயராது' என, மஹாராஷ்டிரா தலைநகர், மும்பை நகர இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.லோக்சபா தேர்தலில், காங்., மற்றும் பா.ஜ., அணிகள் இடையே, கொள்கை அளவிலும், எதிர்கால திட்டங்கள் அடிப்படையிலும் கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு அணியும், ஒவ்வொருதிட்டங்களை அறிவித்து, மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்றன.காங்கிரசின் நியாய் உதவி தொகை வழங்கும் பிரசாரம், இளைஞர்கள் மத்தி யில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என, காங்கிரசார் பிரசாரம் செய்கின்றனர். ஆனால், நியாய் திட்டம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது என, மும்பை இளைஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

நாட்டின் பொருளாதாரமும், தொழில்களும் நிரந்தர வளர்ச்சி பெறும் வகையிலான ஆட்சியே, மத்தியில் வர வேண்டும். வெறும் காற்றடைத்த பந்து போன்று, வாக்குறுதிகளை வீசுவது எந்த பலனை யும் தராது.நியாய் திட்டம் என்பது, அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான அறிவிப்பாக இல்லை; வெறும் ஓட்டு அரசியல் யுக்தி என, தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவின் நிலையை உலக தரத்துக்கு உயர்த்தும் தலைவர் வேண்டும். இன்னும் இலவசம் கொடுப்பது, உதவி தொகை வழங்குவது என்ற அறிவிப்பு இல்லாமல், வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டும்.அதுவே, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் ஆட்சியாக இருக்கும் என, இன்னொரு தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

புதிய வாக்காளர்களில் சிலர், பா.ஜ.,வும்,காங்.,கும் மாறி, மாறி குற்றஞ்சாட்டுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் தேர்தலுடன் நின்று விடும். அதன் பின், உள்ளுக்குள் அரசியல்வாதி கள் கூட்டு சேர்வர். மக்கள் தனித்து விடப் படுவர். தற்போதைய நிலையில், 'நோட்டா' ஓட்டுகளை அதிகரிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

எனவே, மும்பை இளைஞர்களை கவர, காங்கிரசும், பா.ஜ.,வும் புதிய பிரசார யுக்திகளை தேடி வருகின்றன. இங்கு, 48 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கின்றன. இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.
- ஸ்மிதா தாஸ்
- சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)