வதோதரா வாக்காளர்கள் குழப்பத்திற்கு காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்ற, குஜராத்தின், வதோதரா லோக்சபா தொகுதியின் மக்கள், யாருக்கு ஓட்டளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். தேசியத்தை முன் வைத்து, பா.ஜ.,வும், உள்ளூர் பிரச்னைகளை முன்வைத்து, காங்கிரசும் இங்கு பிரசாரம் செய்து வருகின்றன.

குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகள், 23ல் தேர்தலை சந்திக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், வதோதரா உட்படஇரண்டு தொகுதிகளில், மோடி போட்டியிட்டு வென்றார். அதில், உ.பி.,யின் வாரணாசி தொகுதியை, அவர் தக்க வைத்தார்.

இருந்தாலும், மோடியின் தொகுதியாகவே, வதோதரா பார்க்கப்படுகிறது. அது, இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது. மோடி ராஜினாமா செய்ததால், அங்கு நடந்த இடைத் தேர்தலில் வென்ற, பா.ஜ.,வின் ராஜன்பென் படேல், மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, காங்., சார்பில், பிரஷாந்த் படேல் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஒரு காலத்தில், இந்தத் தொகுதி, காங்., வசம் இருந்தது. 'டிவி' தொடரான ராமாயணத்தில், சீதையாக நடித்த, தீபிகா சிக்காலியா, பா.ஜ., சார்பில், 1991ல் இங்கு வென்றார்; 1996ல், காங்கிரசின் சத்தியசிங் கெய்க்வாட் வென்றார்.ஆனால், 1998 முதல், 2009 வரை, பா.ஜ.,வின் ஜெயாபென் தாக்குர், தொடர்ந்து மூன்று முறை வென்றார்; 2009ல், பா.ஜ.,வின், பாலகிருஷ்ண சுக்லா வெற்றியை தொடர்ந்தார்.

மொத்தம், 18 லட்சம் வாக்காளர்களை கொண்ட இந்தத் தொகுதிக்கு உட்பட்ட, ஏழு சட்டசபை தொகுதிகளும், தற்போது, பா.ஜ., வசம் உள்ளன.தற்போதைய தேர்தல் பிரசாரத்தில், நம் விமானப்படை நடத்திய தாக்குதல் உட்பட, தேசிய பிரச்னைகளை முன் வைத்து, பா.ஜ.,வின், ராஜன்பென் படேல், பிரசாரம் செய்கிறார்.

மோடியின் சொந்த மாநிலமாக உள்ளதுடன், இந்தத் தொகுதியை, மோடியின் தொகுதியாகவே, இந்தப் பகுதி மக்கள் நினைக்கின்றனர். மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது,பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. வரும், 23ல் இங்கு தேர்தல் நடக்கிறது.

- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)