தந்தைக்கு மகள் பாடிய தேர்தல் பாட்டு, 'வைரல்'

கேரளாவின், எர்ணாகுளம் லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும், ஹிபி ஈடனுக்கு, 35, ஆதரவாக அவரின், 8 வயது மகள், கிளாரா, பாடிய தேர்தல் பாடல், அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கிறது. காங்கிரசார் பலர் அந்த பாடலை, தங்கள் மொபைல் போனின், 'ரிங்டோனாக' வைத்துள்ளனர்.

எர்ணாகுளம் தொகுதியின் வேட்பாளராக, காங்கிரசால் அறிவிக்கப்படும் முன்பே, ஹிபி மகள் பாடிய, தேர்தல் தொடர்பான ஒரு பாடல், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அப்போதே, பல ஆயிரம் பேர் அந்த பாடலை, 'லைக்' செய்திருந்தனர்.ஹிபி பெயர், வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றதும், தந்தையின் பிரசாரத்திற்காக, மகள் கிளாரா, மற்றொரு பாடலை பாடினார். பிரபல இசையமைப்பாளர், மெஜோ ஜோசப் அந்த பாடலை உருவாக்கியிருந்தார்; வரிகளை, விநாயக் சசிகுமார் எழுதியிருந்தார்.

'உள்ளம் தொடும் ஹிபி ஈடன்' எனத் துவங்கும் அந்த பாடல், மிகவும் அருமையாக இருப்பதால், தன் பிரசார வாகனத்தில், அந்த பாடலை ஒலித்தபடியே, வேட்பாளர் ஹிபி, பிரசாரம் மேற்கொள்கிறார்.அந்த பாடலின் முடிவில், ஹிபியின் மனைவி, அன்னாவும், கணவருக்கு அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என, அன்புடன் கேட்டுக் கொள்கிறார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)