நீதிமன்றத்தில் வென்றால் அமமுக- அதிமுக இணைப்பு : தினகரன்

சென்னை: சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுக இணைக்கப்படும் என தினகரன் கூறினார்.
சென்னை அசோக்நகரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர் கட்சியின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தினகரன் கூறியதாவது: சசிகலாவிற்காக அமமுகவில் கட்சி தலைவர்பதவி எப்போதும் காலியாக இருக்கும்.

சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுக இணைக்கப்படும் . அமமுகவின் கட்சியை பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாணப்பத்திரம் பெற்றுள்ளோம். அமமுகவின் துணை தலைவராக அவைத்தலைவர் நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் ஒப்புதலுடனே தான் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)