ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடில்லி: அமேதி தொகுதியில் விதி மீறி காங்கிரஸ் கட்சியினர் பேனர் வைத்திருந்தது தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் ராகுலுக்கு விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது: அமேதி தொகுதியில், தேர்தல் அதிகாரிகளின் அனுமதி மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இன்றி காங்கிரஸ் சார்பில் விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 7 இடங்களில் விளம்பர பேனர் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. காங்கிரசாரிடம், விளம்பரம் வைப்பதற்கான அனுமதி சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் கேட்ட போது, எதையும் தரவில்லை. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.


வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் 'நியாய்' திட்டத்தை விளம்பரப்படுத்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் புகைப்படத்துடன், அவர் போட்டியிடும் உ.பி.,யின் அமேதி தொகுதியில் பல இடங்களில் காங்கிரசார் பேனர் வைத்திருந்தனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)