'மாத்தியோசிக்கும்' இளைஞர்கள்: புதிய வாக்காளர்கள் முடிவு என்ன?

கோவை: தமிழக இளம் வாக்காளர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


தமிழக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த இளம் வாக்காளர்கள், 2.68 கோடி பேர். அதாவது, 18 முதல் 19 வயது வரையிலான வாக்காளர்கள், 12 லட்சம் பேர்; 20 - 29 வயது வாக்காளர்கள், 1.18 கோடி பேர்; 30-39 வயது வாக்காளர்கள், 1.38 கோடி பேர்.இளம் வாக்காளர்கள் பலர், இந்த முறை லோக்சபா தேர்தலில் மிகுந்த ஆர்வத்துடன் ஓட்டு அளித்தனர். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளில் இளம் தலைமுறையினர் பலர் ஓட்டளிக்க பெருத்த ஆர்வம் காட்டினர்.பணத்துக்காக ஓட்டளித்தல், ஒரே வேட்பாளர் அல்லது கட்சிக்கு வாக்களிப்பது என்ற நிலையில் இருந்து இளம் வாக்காளர்கள் மாறுபட்டிருக்கின்றனர். இளம் வாக்காளர்களின் பங்களிப்பைப் பொறுத்தே, கட்சிகளின் வெற்றி வாய்ப்பு அமைய உள்ளது.ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய ஆளுமை இல்லாத இந்தத் தேர்தலில், மக்கள் கூட்டத்தைத் திரட்டக்கூடிய கவர்ச்சிகரமான தலைவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அதே நேரம், தற்போது நிலவும் அரசியல் நிலவரம் குறித்து முழுமையாக புரிந்துகொண்ட நிலையில், இளம் வாக்காளர்கள் பெரும்பாலானோர் இல்லை என்பதும் களத்தில் தெளிவாகத் தெரிந்தது.'நாங்க சொல்ற கட்சிக்கு ஓட்டுப்போடு' என்று பெற்றோர் கூறினால் கூட, அதைத் தட்டிக்கேட்கும் மனநிலையில்தான் புதிய இளம் வாக்காளர்கள் உள்ளனர். 'நாங்க மனசுக்குப் பிடிக்கிற வேட்பாளருக்கு ஓட்டுப்போடப்போறோம்... இதில, நீங்க தலையிடாதீங்க...' என்று பெற்றோரிடமே,இளம் வாக்காளர்கள் நேரடியாக கூறியதைப் பல இடங்களில் காண முடிந்தது.


இதேபோல், பாரம்பரியமாக ஒரே கட்சிக்கு பெற்றோர் வாக்களித்திருந்தால், அதை மாற்றி வேறு கட்சிக்கு ஓட்டுப்போடும் மன நிலை, இளம் வாக்ககாளர்களுக்கு இருக்கிறது. 'நீங்க ஒரே கட்சிக்கே போடுவீங்க... நாங்களாவது மாத்திப்போடுறமே' என்று, பெற்றோரிடம் நேரடியாக சொல்லிவிடுகின்றனர். நடிகர்களின் ரசிகர்களாக அவர் சொன்ன கட்சிக்கு வாக்களிக்கும் இளந்தலைமுறையினரும் இருக்கின்றனர்.
சட்டைகளில் நடிகர்களின் படத்தை ஒட்டியவாறே வந்த இளந்தலைமுறையினர் பலர். 'நோட்டாவுக்குப் போடுறோம். அரசியலே வேண்டாம்' என்று கூறும் இளந்தலைமுறைகள் ஜாஸ்தி.
nsmimg685310nsmimg

இளம் வாக்காளர்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு உள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் அதிகமானோர் அரசியலில் தங்களை அறியாமல் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் சொல்வது அனைத்துமே நிஜம் கிடையாது. அது மாயை என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. இன்றைய இளம் வாக்காளர்கள், அரசியலில் பெரிய மாற்றத்தை கொண்டுவர வாய்ப்புள்ளது. நிறைய இளைஞர்கள் வழக்கமான கட்சிகளைவிட, புதிதாக கருத்துகளை சொல்லும் கட்சிகளை விரும்பும் மன நிலையில் உள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)