பிஜு ஜனதா தளத்துக்கு 'ஹாட்ரிக்' வெற்றி?

ஒடிசாவின், பலாங்கிர் லோக்சபா தொகுதியில், மூன்றாம் முறையாக வெற்றி பெற, முதல்வர், நவீன் பட்நாயக்கின், பிஜு ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது; இழந்த தொகுதியை மீட்க, பா.ஜ., உறுதி எடுத்துள்ளது.

பலாங்கிர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., மூத்த தலைவர், கே.வி.சிங் டியோவின் மனைவியும், முன்னாள், எம்.பி.,யுமான, சங்கீதா சிங் டியோ போட்டி யிடுகிறார். இவர், இதே தொகுதியில், 1998, 1999 மற்றும் 2004ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று, எம்.பி.,யானவர். ஆளும் பிஜு ஜனதா தளம் சார்பில், தற்போதைய எம்.பி., காளிகேஷ் சிங் டியோ போட்டியிடுகிறார்; இவர், 2009 தேர்தலிலும், வெற்றி பெற்றவர்; மூன்றாம் முறையாக வெற்றி பெற, பிஜு ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது. ஆனால், தங்கள் கைவசம் மூன்றாண்டு களாக இருந்து, பிஜு ஜனதாவிடம் இழந்த தொகுதியை மீட்க வேண்டும் என, பா.ஜ.,வின், கே.வி.சிங் குடும்பம் திட்டமிட்டு உள்ளது.

காங்கிரஸ் சார்பில், ஒடிசா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், நரசிங்க மிஸ்ராவின் மகன், சம்ரேந்திரா மிஸ்ரா போட்டியிடுகிறார். இந்த தொகுதி, மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். அதனால், வேட்பாளர்கள் மற்றும் ஓட்டு சாவடிகளின் பாதுகாப்புக்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 21 தொகுதிகளை உடைய, இந்த மாநிலத்தில், இந்த தொகுதியில், நேற்று விறுவிறுப்பான தேர்தல் நடந்தது. பா.ஜ., வெற்றி பெறுமா... ஆளும், பிஜு ஜனதா தளம் வெற்றிக்கனியை பறிக்குமா என்பதற்கு, காத்திருப்போம்.

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)