'சூப்பர் விமானி' மோடி

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, பிரசாரம் செய்த, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கதை ஒன்றை சொன்னார்...வானில், 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. திடீரென விமானம் ஆட்டம் கண்டது. பயணியர் உயிருக்கு பயந்து, தவிப்பில் இருந்தனர். 9 வயது சிறுவன் ஒருவன், அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தான்.சக பயணியர், அவனிடம், 'விமானம் விழுந்து நொறுங்கப் போகிறது. அனைவரும் உயிரை விடப் போகிறோம். எந்த பதட்டமும் இல்லாமல் இருக்கிறாயே' என, கேட்டனர். அந்த சிறுவன், 'விமானத்தை ஓட்டுபவர் என் தந்தை. அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது' என்றான். அந்த விமானி போன்றவர், நம் பிரதமர் மோடி. அவர் மீது நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் பேசியதும், பா.ஜ.,வினர் கைதட்டல் பலமாக எழுந்தது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)