'அ.தி.மு.க., அரசுக்கு எதிராக இனி போராட்டம் இல்லை'

மகுடஞ்சாவடி:''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, இனி போராட்டம் தேவையில்லை; ஏனெனில் அரசுடன் இணைந்துள்ளோம்,'' என, பா.ம.க., அன்புமணி கூறினார்.


நாமக்கல் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து, சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில், பா.ம.க., அன்புமணி பிரசாரம் செய்தார். அப்போது அவர், பேசியதாவது:


சேலம் மாவட்டத்தின், பெரும் பகுதி வறட்சியாக உள்ளது. இதற்கு ஒரே தீர்வு, காவிரி உபரி நீர்த்திட்டம். இதன்படி மேட்டூர் உபரி நீரை ஏரி, குளங்கள், குட்டை போன்ற பகுதிகளுக்கு நீரேற்றம் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.இனி போராட்டம் தேவையில்லை; ஏனெனில் அரசுடன் இணைந்துள்ளோம்.


கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். இதற்காக, பல ஆயிரம் செலவழிக்க தயாராக உள்ளார்.ஸ்டாலின் என்றால் அராஜகம், அவருக்கு யாரை பற்றியும், கவலையில்லை; தெரு பேச்சாளரை விட தரம் தாழ்ந்து பேசுகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக விவாதம் செய்ய அழைத்தும், வர மறுக்கிறார்.


ஸ்டாலின் நீட்தேர்வு ரத்து என்கிறார். அதை இந்தியா முழுவதும் கொண்டு வந்ததே, தி.மு.க., - காங்., தான். 'நாங்கள் வெற்றி பெற்றால்,ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து' என்கிறார். ஆனால், அதற்கு கையெழுத்து போட்டதே ஸ்டாலின் தான்.ஸ்டெர்லைட், ஆலையை ரிப்பன் வெட்டி திறந்தது கருணாநிதி, ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி தந்தது ஸ்டாலின்; இன்று அதை எதிர்த்து போராடுவாராம். இன்றுள்ள மக்களிடம் விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. அவர்களை ஏமாற்ற முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)