'மக்கள் விரோத ஆட்சியை தோற்கடிப்போம்!'தினகரன்

சென்னை:'மக்கள் விரோத மத்திய, மாநில ஆட்சிகளையும், இரட்டை வேட தி.மு.க.,வையும் தோற்கடிப்போம்' என, அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலர், தினகரன் தெரிவித்துள்ளார். ஷ


அவரது அறிக்கை:அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், தமிழக நலன்களை கூட்டணி போட்டு சூறையாடியது போதாது என, தேர்தல் களத்திலும், கூட்டணி அமைத்துள்ளன. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில், இவர்கள் போடும் இரட்டை வேடத்தை, இவர்களே அம்பலப்படுத்தி உள்ளனர்.இன்னொரு புறம், காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டே, பா.ஜ.,வுடன், தி.மு.க., ரகசிய உறவு வைத்துள்ளது.


துண்டு சீட்டை கைப்பற்றியதாகக் கூறி, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை, தேர்தல் ஆணையம் நிறுத்தியது.தற்போது, தி.மு.க., பொருளாளர், துரைமுருகனுக்கு நெருக்கமான இடங்களில், 12 கோடி ரூபாய் கைப்பற்றிய பிறகும், தேர்தல் நடக்கிறது என்றால், பார்த்து கொள்ளுங்கள். 'மேகதாது அணையை கட்டியே தீருவோம். காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைப்போம்' என, கர்நாடகாவில், காங்., பிரசாரம் செய்கிறது. இதை, தி.மு.க.,வும் வேடிக்கை பார்க்கிறது.
இவ்வாறு, தினகரன் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)